For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

ஞானசேகரன் என்னுடைய தம்பி...! புதிய சர்ச்சையை கிளப்பிய சபாநாயகர் அப்பாவு...!

Gnanasekaran is my younger brother...! The speaker's father has sparked a new controversy
06:55 AM Jan 21, 2025 IST | Vignesh
ஞானசேகரன் என்னுடைய தம்பி     புதிய சர்ச்சையை கிளப்பிய சபாநாயகர் அப்பாவு
Advertisement

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைதான ஞானசேகரன் என்னுடைய தம்பி என சபாநாயகர் அப்பாவு பேசியது புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.

சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், சென்னை கோட்டூர்புரத்தைச் சேர்ந்த ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டார். அவருக்கு மட்டுமே இவ்வழக்கில் தொடர்பு உள்ளது என காவல்துறை திட்டவட்டமாக தெரிவித்தது.

Advertisement

ஆனால், வழக்கின் பின்னணியில் முக்கியப் பிரமுகர்கள் சிலரும் உள்ளனர். அவர்களை காப்பாற்ற அரசும், காவல் துறையும் முயல்கிறது என அதிமுக, பாஜக, பாமக உள்பட பல்வேறு அரசியல் கட்சிகள் குற்றம்சாட்டின. இந்த நிலையில், உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் புக்யா சினேஹா பிரியா, அய்மன் ஜமால், பிருந்தா ஆகியோர் தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டது.

அக்குழுவினர் குற்றச்சாட்டுக்கு உள்ளான ஞானசேகரனின் வீட்டில் சோதனை மேற்கொண்டு முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றினர். மேலும், கைது செய்யப்பட்டிருந்த ஞானசேகரனிடமும் விசாரணை நடத்தினர். அதேபோல், அவரிடமிருந்து ஏற்கெனவே பறிமுதல் செய்யப்பட்ட செல்போனை சைபர் க்ரைம் போலீஸாரிடம் வழங்கி அதில் சேமித்து வைத்திருந்த வீடியோக்களையும் கைப்பற்றினர்.

ஏற்கனவே சட்டமன்றத்தில் ஞானசேகரன் என்பவர் திமுகவின் அனுதாபி என தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் பேசியது பெரும் சர்ச்சைக்குரிய விஷயமாக மாறியது. இந்த நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சபாநாயகர் அப்பாவு ஞானசேகரன் என்னுடைய தம்பி என பேசியது புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது. அவர் பேசிய அந்த வீடியோ தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Tags :
Advertisement