டெல்லியில் உலகளாவிய திருக்குறள் மாநாடு...! மத்திய அமைச்சர் எல்.முருகன் அறிவிப்பு..!
உலகளாவிய திருக்குறள் மாநாடு டெல்லியில் விரைவில் நடத்தப்படும் என்று மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர் எல். முருகன் கூறியுள்ளார்.
பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் ‘வாழ்நாள் முழுவதும் ஹிப்னாஸிஸ்: ஊக்குவிப்பு, தடுப்பு மற்றும் தலையீடு’ (Hypnosis across Lifespan: Promotion, Prevention, and Intervention) என்ற சர்வதேச மாநாட்டை நேற்று தொடங்கி வைத்துப் பேசிய அமைச்சர், திருக்குறளின் கருத்துகள் நிலையானது என்றும், இந்த செவ்வியல் நூல் உலகின் சிறந்த பொக்கிஷங்களில் ஒன்றாக போற்றப்படுகிறது என்றும் கூறினார். உலகளாவிய திருக்குறள் மாநாடு டெல்லியில் விரைவில் நடத்தப்படும்.
மதுரை மாவட்டம் மேலூர் பகுதியைச் சுற்றியுள்ள கிராம மக்கள் தெரிவித்த கவலையைத் தொடர்ந்து டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்தை ரத்து செய்த பிரதமர் மோடிக்கு எல். முருகன் நன்றி தெரிவித்தார். நல்வாழ்வை மேம்படுத்துவதற்கும், செயலிழப்பைத் தடுப்பதற்கும், சிக்கலான தருணங்களில் திறம்பட செயலாற்றுவதற்கும் ஒரு ஒருங்கிணைந்த, தகவமைப்பு கருவியாக ஹிப்னாஸிஸ் திகழ்வதையும் அதன் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார். இது போன்ற மாநாடுகள் முக்கியமான உரையாடல்களை வளர்க்கின்றன என்று அவர் கூறினார். மனிதனின் வாழ்நாள் முழுவதும் ஹிப்னாஸிஸின் பயன்பாட்டை இதுபோன்ற மாநாடுகள் ஊக்குவிக்கின்றன என்று அவர் கூறினார்.