For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

நாடாளுமன்றத்தில் கண்ணாடி கூண்டு பாதுகாப்பு!… மனிதர்களை ஸ்கேன் செய்யும் இயந்திரம் பொருத்த முடிவு!

09:29 AM Dec 14, 2023 IST | 1newsnationuser3
நாடாளுமன்றத்தில் கண்ணாடி கூண்டு பாதுகாப்பு … மனிதர்களை ஸ்கேன் செய்யும் இயந்திரம் பொருத்த முடிவு
Advertisement

கடந்த 2001ம் ஆண்டு டிசம்பர் மாதம் 13ம் தேதி நாடாளுமன்றத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதன் 22ம் ஆண்டு நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. இந்நிலையில் தான் மக்களவையில் அசம்பாவித சம்பவம் ஒன்று நடந்தது. நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் வழக்கம்போல் தொடங்கியது. நாடாளுமன்ற இரு அவைகளிலும் நடக்கும் விவாதங்களை பொதுமக்கள் பார்வையாளர் மாடத்தில் இருந்து பார்த்து கொண்டிருந்தனர்.

Advertisement

அப்போது திடீரென்று 2 பேர் பார்வையாளர் மாடத்தில் இருந்து மக்களவை அரங்குக்குள் குதித்தனர். மஞ்சள்நிற ஸ்பிரே அடித்ததோடு எம்பிக்களின் மேஜை மீது ஏறினர். இதனால் எம்பிக்கள் பதறிப்போயினர். இருப்பினும் துணிச்சலாக சில எம்பிக்கள் செயல்பட்டு 2 பேரையும் பிடித்து தர்மஅடி கொடுத்து பாதுகாவலர்களிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் லோக்சபாவுக்குள் நுழைந்து ஸ்பிரே அடித்தவர்கள் கர்நாடகாவின் மைசூரை சேர்ந்த சாகர் சர்மா மற்றும் டி மனோ ரஞ்சன் (வயது 35) என்பது தெரியவந்தது.

அதேபோல் நாடாளுமன்ற வளாகத்தில் ஸ்பிரே அடித்தது ஹரியானா மாநிலம் ஹிசார் பகுதியை சேர்ந்த நீலம் (42) மற்றும் அமோல் ஷிண்டே (25) என்பதும் தெரியவந்தது. இவர்கள் 4 பேரும் கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்கள் திட்டமிட்ட லோக்சபா மற்றும் நாடாளுமன்ற வளாகத்தில் ஸ்பிரே அடித்ததும் தெரியவந்தது. இவர்கள் 4 பேரும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் 2 பேர் தலைமறைவாக உள்ளனர். அவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவத்துக்கு காங்கிரஸ், திமுக உள்பட பல்வேறு கட்சிகளின் எம்பிக்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். நாடாளுமன்றத்தில் இருக்கும் எம்பிக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்குவதில் மத்திய அரசு தவறிவிட்டது. இந்த சம்பவம் என்பது மத்திய அரசின் பாதுகாப்பு குறைபாட்டின் ஒரு பகுதியாகவே நடந்துள்ளதாக குற்றம்சாட்டினர்.

இந்நிலையில் நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகள் என்பது அதிகரிக்க மத்திய அரசு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி முதற்கட்டமாக நாடாளுமன்ற நடவடிக்கைகளை பொதுமக்கள் பார்வையிட அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் எம்பிக்கள், நாடாளுமன்ற பணியாளர்கள், பத்திரிகையாளர்கள் ஆகியோர் நாடாளுமன்றத்துக்குள் செல்ல தனித்தனி நுழைவு வாயில்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. மேலும் மக்கள் நாடாளுமன்ற செயல்பாடுகளை பார்வையிட அனுமதிக்கப்படும் பட்சத்தில் அவர்கள் 4வது நுழைவு வாயில் வழியாக மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

மேலும் பார்வையாளர்கள் மாடம் என்பது தற்போது திறந்த நிலையில் உள்ளது. இதனை கண்ணாடி கூண்டு போட்டு மூட முடிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது பார்வையாளர் மாடத்தின் விளிம்பு பகுதியில் கண்ணாடி பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன்மூலம் பார்வையாளர் மாடத்தில் இருந்து பொதுமக்கள் யாரும் இரு அவைகளின் அரங்குக்குள் குதிப்பதை தடுக்க முடியும். இதுமட்டமின்றி வரும் நாட்களில் விமான நிலையங்களை போல் ஒருவரின் உடல் முழுவதையும் பரிசோதிக்கும் ஸ்கேன் இயந்திரங்கள் நாடாளுமன்ற வாயில்களில் பொருத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Tags :
Advertisement