14 வயதில் கல்யாணம்.. குழந்தை வேற இருக்கு.. கள்ளக்காதலனுடன் ஓடிய சிறுமி..!! விசாரணையில் பகீர்..
14 வயதில் காதல் வயப்பட்ட சிறுமி, 16 வயதில் குழந்தையை பெற்றெடுத்து, கணவன் - மனைவி சண்டையில், கள்ளக்காதலருடன் ஓடிய சம்பவம் சென்னை பெரம்பூரில் அரங்கேறியுள்ளது.
புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த 34 வயது பெண் மீன் வியாபாரம் செய்து வருகிறார். இவரது 16 வயது மகள், பாரிமுனையில் உள்ள துணிக்கடையில் வேலை செய்து வருகிறார். சிறுமி கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு பிரகாஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 6 மாதமாக கணவரை பிரிந்து, தனது பெற்றோருடன் சிறுமி வசித்துள்ளார்.
அப்போது, சதீஷ்குமார் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, கடந்த 3ம் தேதி அவருடன் சென்றார். புகாரின் பேரில், போலீசார் நேற்று முன்தினம் திருவாலங்காடு பகுதியில் தங்கியிருந்த சிறுமி மற்றும் சிறுமியின் காதலனான ஓட்டேரி பகுதியைச் சேர்ந்த டேனி (எ) சதீஷ்குமாரை (19) பிடித்தனர்.
சிறுமியை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தியதில், சிறுமி 2 வருடத்திற்கு முன்பு பிரகாஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்த போது சிறுமி கர்ப்பமாக இருந்த காலத்தில், மருத்துவமனையில் போலியான வேறு ஒரு நபரின் ஆதார் கார்டை கொடுத்து சிறுமி வயதை மறைத்து குழந்தை பெற்றுக் கொண்டதும், அதன் பிறகு கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து தற்போது சதீஷ்குமார் என்பவரை காதலித்து அவருடன் சென்றதும் தெரிய வந்தது.
இதனையடுத்து தற்போது சிறுமியை விட்டு பிரிந்து வாழும் முதல் கணவர் பிரகாஷ் மற்றும் தற்போது சிறுமியை ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்ற சதீஷ்குமார் ஆகிய இருவர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் புளியந்தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
சமூக ஆர்வலர்கள் வேதனை : பள்ளிக்குச் சென்ற நேரத்தில் ஏற்பட்ட காதலை நம்பி திருமணம் செய்த சிறுமி, குழந்தையை பெற்றெடுத்த 6 மாதத்தில் கணவன் - மனைவி சண்டையால் வீட்டிற்கு வந்துள்ளார். சட்டப்படி ஏற்றுக்கொள்ள இயலாத திருமணத்தில், குழந்தையை ஈன்றெடுத்த பெண், புதிய காதலால் வேறொருவரை தேடி ஓடிய சம்பவம் சமூகத்தில் எந்த மாதிரியான மாற்றம் நிகழ்ந்துள்ளது என்பதை உணர்த்துவதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.