For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

50 வருஷத்துக்கு அப்புறம் மீண்டும் பேய் மழை..!! பாலைவனத்தில் நடந்த பயங்கரம்..!! இது ஆச்சரியம் அல்ல எச்சரிக்கை..!!

A sudden 100 mm rain in the Sahara desert has caused a huge flood there.
07:12 AM Oct 14, 2024 IST | Chella
50 வருஷத்துக்கு அப்புறம் மீண்டும் பேய் மழை     பாலைவனத்தில் நடந்த பயங்கரம்     இது ஆச்சரியம் அல்ல எச்சரிக்கை
Advertisement

உலகின் மிகப்பெரிய பாலைவனமான சஹாரா பாலைவனம் அமைந்துள்ளது. உலகின் அதிக வெப்பம் கொண்ட பரப்பிற்காகவும் இது அறியப்படுகிறது. உலகம் முழுக்க இருந்தும் இந்தப் பாலைவனத்தைக் காண சுற்றுலாப் பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். கடும் வெப்பம், பெரும் நிலப்பரப்பு என பல விஷயங்கள் ஆச்சரியத்தை ஏற்படுத்தும் அதேசமயத்தில் உலகின் கொடிய விஷம் கொண்ட உயிரினங்களும் இந்த தான் இருக்கின்றனவாம்.

Advertisement

இந்நிலையில், பாலைவனத்தில் வருடத்தில் எப்போதாவது தான் மழை பெய்யுமாம். அதுவும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு இருக்காதாம். இந்நிலையில் தான், அந்த பாலைவனத்தில் திடீரென பெய்துள்ள 100 மி.மீ மழை அங்கு பெரும் வெள்ளத்தை ஏற்படுத்தியுள்ளது. இது ஒருபுறம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருந்தாலும், மறுபுறம் சூழலியல் ஆர்வலர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து மொராக்கோ நாடு தெரிவிக்கையில், "கடந்த 30 முதல் 50 வருடத்திற்கு முன்பு இப்படி குறைந்த நேரத்தில் இவ்வளவு பெரிய மழைப் பொழிவு காணப்பட்டது. அதன்பிறகு தற்போது தான் பெய்திருக்கிறது. தலைநகர் ரபாட்டாவில் இருந்து 450 கி.மீ. தொலைவில் உள்ள டாகோயுனைட் கிராமத்தில் பெய்த கனமழையால், இந்த வெள்ளம் ஏற்பட்டுள்ளது. எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பெருமழையின் மூலம், சஹாரா பாலைவனத்தில் உள்ள வறண்ட ஏரியான இரிக்கி ஏரியில் நீர் நிரம்பியுள்ளது. உலகில் பாலைவனத்திற்காக பெரிதும் அறியப்படும் சஹாராவில் ஒரே நாளில் 100 மி.மீ. மழைப் பதிவாகியிருப்பதும், வெள்ளம் ஏற்பட்டிருப்பதும் ஆச்சரியம் கொள்ள வேண்டிய விஷயம் அல்ல, புவியின் வெப்பமயமாதல் எந்த அளவிற்கு கால நிலை மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது என்பதற்கான சாட்சி தான் இது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

Read More : நோட்…! குரூப்-4 காலி பணியிடங்கள் அதிகரிப்பா…? TNPSC கொடுத்த விளக்கம்

Tags :
Advertisement