For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

ரூ.5 லட்சம் வரை இலவசம்..!! யாருக்கெல்லாம் தெரியுமா..? விண்ணப்பிப்பது எப்படி..?

Each family members can get medical treatment up to Rs.
05:20 AM Sep 22, 2024 IST | Chella
ரூ 5 லட்சம் வரை இலவசம்     யாருக்கெல்லாம் தெரியுமா    விண்ணப்பிப்பது எப்படி
Advertisement

நம் நாட்டில் ஏழை, எளிய மக்களின் எண்ணிக்கை அதிகம். அன்றாட வாழ்க்கையை நடத்துவதே கஷ்டம் என்ற நிலையில் தான் பெரும்பாலானோர் வாழ்ந்து வருகின்றனர். அப்படி இருக்கையில் லட்சக்கணக்கில் செலவு செய்து உயிருக்கு ஆபத்தான நோய்களை குணப்படுத்திக் கொள்வது என்பது அவர்களால் முடியாத ஒரு காரியம் தான். இதற்காக தான் மத்திய-மாநில அரசு காப்பீட்டு திட்டத்தை அறிமுகம் செய்து செயல்படுத்தி வருகின்றன.

Advertisement

மத்திய அரசு கடந்த 2018இல் "ஆயுஷ்மான் பாரத் யோஜனா" என்ற பெயரில் மருத்துவ காப்பீட்டு திட்டத்தை தொடங்கியது. இத்திட்டத்தின் மூலம் ரூ.5 லட்சம் வரை மருத்துவ சேவை பெற முடியும். முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்துடன் இணைந்து ஆயுஷ்மான் பாரத் யோஜனா திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மொத்தம் 17,000 மருத்துவமனைகள் இந்த திட்டத்தில் இணைக்கப்பட்டு இருக்கும் நிலையில், இதன் மூலம் பயனாளிகளுக்கு அறுவை மற்றும் நவீன சிகிச்சைகள் செய்யப்பட்டு வருகிறது.

ஆயுஷ்மான் பார்த் யோஜனா திட்டத்தின் பயன்கள்:

* கொடிய நோய்களுக்கு செலவின்றி மருத்துவம் பார்த்துக் கொள்ளலாம்.

* ஆயுஷ்மான் காப்பீடு அட்டை மூலம் குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் ரூ.5,00,000 வரை மருத்துவ சிகிச்சை பெறலாம்.

    * அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் வசதி உள்ளது.

    விண்ணப்பிப்பது எப்படி..? தேவையான ஆவணங்கள் என்னென்ன..?

    • * ஆதார் கார்டு

    * ரேசன் கார்டு

    * செல்போன் எண்

    முதலில் PMJAY என்ற அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தை க்ளிக் செய்ய வேண்டும். பிறகு கேட்கப்படும் விவரங்கள் மற்றும் ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். உங்கள் விண்ணப்பம் சரிபார்க்கப்பட்டு ஏற்கப்பட்ட பின்னர் ஆயுஷ்மான் கார்டை தபால் மூலம் அனுப்பி வைப்பார்கள்.

    Read More : உதயநிதிக்கு துணை முதல்வர் பதவியா..? அதிருப்தியில் மூத்த அமைச்சர்கள்..? சமாதானம் செய்யும் தலைமை..!! திமுகவில் சலசலப்பு..!!

    Tags :
    Advertisement