’எல்லாம் தயாரா வச்சிக்கோங்க’..!! ’ரொம்ப சீரியஸ்’..!! மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை..!!
சீனாவில் பரவி வரும் நிமோனியா காய்ச்சல் அதிக பாதிப்புகளை உருவாக்கி வரும் நிலையில், மாநில, யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு அவசர ஆலோசனை கடிதத்தை எழுதியுள்ளது.
இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் எழுதியுள்ள கடிதத்தில், சீனாவில் பரவி வரும் நிமோனியா வைரஸ் அதிக பாதிப்புகளை உருவாக்கி வருகிறது. குறிப்பாக, இந்த வகை வைரஸ் அதிகளவில் குழந்தைகளிடம் சுவாசப் பிரச்சனைகளை ஏற்படுத்தி வருகிறது. இதையடுத்து, சீனாவில் பொது சுகாதார நெருக்கடி நிலை உருவாகியுள்ளது. இதனை உணர்ந்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கி விட வேண்டும்.
பொது சுகாதார உள்கட்டமைப்பு வசதிகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். குறிப்பாக மருந்துகள், ஆக்சிஜன் ஆகியவற்றை போதுமான அளவில் கையிருப்பு வைத்திருக்க வேண்டும். நிமோனியா காய்ச்சல் காரணமாக கடுமையான சுவாச பிரச்சனைக்கு ஆளாவோரை கண்டறிந்து தேவையான சிகிச்சைகளை அளிக்க மாவட்ட மற்றும் மாநில கண்காணிப்பு குழுக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.
இந்தியாவில் தற்போதைய நிலையில் நிமோனியா குறித்த அச்சுறுத்தல் எதுவும் இல்லை என்றாலும் பொதுமக்கள் பாதிப்புக்கு உள்ளாகாமல் இருக்க மாநிலங்கள் நிலைமையை தொடர்ந்து கண்காணிப்பது அவசியம்” என மத்திய சுகாதார அமைச்சகம் எச்சரித்துள்ளது.