’’16 பெற்று பெருவாழ்வு வாழ்க’’..!! அதிக குழந்தைகளைப் பெற்றெடுக்க சொன்ன முதல்வர் ஸ்டாலின்..? உண்மை என்ன..?
அதிக குழந்தைகளைப் பெற்றெடுக்கும்படி முதலமைச்சர் முக.ஸ்டாலின் சொன்னதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. உண்மையில் அவர் அப்படி சொன்னாரா என்பதை பார்ப்போம்.
சென்னை திருவான்மியூரில் உள்ள மருதீஸ்வரர் திருக்கோயில் திருமண மண்டபத்தில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்கள் சார்பில் 31 இணைகளுக்கான முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை ஏற்று திருமணம் நடத்தி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து பேசிய அவர், “முன்பெல்லாம் திருமணத்திற்கு வாழ்த்து சொல்லும் போது பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க என்று வாழ்த்தினார்கள். அந்த 16 என்பது குழந்தைகளை குறிக்காது. மாடு, மனை, மனைவி, மக்கள், கல்வி, கேள்வி, அறிவு, ஒழுக்கம், நிலம், நீர், வயது, வாகனம், பொன், பொருள், போகங்கள் போன்ற 16 செல்வங்கள் என்று அர்த்தம். ஆனால், தற்போது அளவோடு பெற்று வளமோடு வாழ்க என்றே வாழ்த்துகிறார்கள் என்றார்.
மேலும் “நாடாளுமன்றத் தொகுதிகள் குறையும் என்ற நிலை வரும்போது, ஏன் அளவோடு பெற்று வளமோடு வாழ வேண்டும்? நாமும் 16 குழந்தைகளை பெற்றுக் கொள்ளலாம் என்ற சில குரல்கள் எழுந்துள்ளது. இந்த நேரத்தில் மணமக்களுக்கு நான் வைக்கும் வேண்டுகோள் ஒன்றுதான். குழந்தைகளுக்கு அழகிய தமிழ் பெயரை சூட்டுங்கள்” என்று முதல்வர் முக.ஸ்டாலின் வாழத்திப் பேசினார்.
இந்நிலையில், அதிக குழந்தைகளைப் பெற்றெடுக்கும்படி முதல்வர் முக.ஸ்டாலின் சொன்னதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இப்படிப்பட்ட கருத்தை சொன்னது தமிழ்நாடு முதலமைச்சர் அல்ல. ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தான். "தென் இந்தியாவில் முதியோர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்பதால் தம்பதிகள் அதிக குழந்தைகள் பெற்றெடுக்க வேண்டும். இரண்டு குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்கள்தான் ஊராட்சி தேர்தலில் போட்டியிட தகுதி ஆனவர்கள் என்ற சட்டத்தை கொண்டு வர யோசனை உள்ளது" என சந்திரபாபு நாயுடு தெரிவித்திருந்தார்.
அவர் தெரிவிப்பது போல் தென் இந்தியாவில் மக்கள் தொகை தொடர்ந்து குறைந்து வருகிறது. ஆனால், வட இந்தியாவை பொறுத்தவரை மக்கள் தொகை அதிகரித்து வருகிறது அல்லது நிலையாக இருக்கிறது என சொல்லலாம். பிறப்பு விகிதம் அதிகம் உள்ள மாநிலங்களில் முதல் இடத்தில் பீகார் உள்ளது. அடுத்தபடியாக, உத்தரப்பிரதேசமும், மூன்றாம் இடத்தில் மத்தியப் பிரதேசமும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Read More : டாஸ்மாக் ஊழியர்களுக்கு பணம் கொட்டப் போகுது..!! தீபாவளி போனஸ் அறிவித்தது தமிழ்நாடு அரசு..!!