மத்திய அரசு நிறுவனத்தில் வேலை.. மாதம் 96,000 சம்பளம்..! டிகிரி முடித்தவர்களுக்கு செம சான்ஸ்..
மத்திய அரசின் இன்சூரன்ஸ் நிறுவனமான ஜெனரல் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனத்தில் உதவி மேலாளர் பதவிக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 110 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. அதற்கான தகுதிகள் குறித்து விரிவாக தெரிந்துகொள்ளலாம்.
காலியிடங்களின் எண்ணிக்கை : பொதுப் பிரிவில் 43 இடங்களும், எஸ்சி பிரிவில் 15 இடங்களும் எஸ்டி பிரிவில் 10 இடங்களும், ஒபிசி பிரிவில் 34 இடங்கள், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 6 இடங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. மாற்றுத்திறனாளிகளுக்கு 5 இடங்களும் மருத்துவ பிரிவில் எஸ்சிக்கு ஒன்று, பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 2 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன
வயது தகுதி : உதவி மேலாளர் பதவிக்கு விண்ணப்பிக்க, 01.11.2024 தேதியின்படி, குறைந்தபட்சம் 21 வயதும் அதிகபடியாக 30 வயதும் இருக்கலாம்.
கல்வித்தகுதி : விண்ணப்பத்தாரர்கள் சம்மந்தப்பட்ட துறைகளில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். பொது பிரிவு, மனித வளம், சட்டம், தகவல் தொழில்நுட்பம், பொறியியல் ஆகிய பிரிவுகளில் விண்ணப்பம் செய்பவர்கள் முதுகலை பட்டம் முடித்திருக்க வேண்டும். நிதி பிரிவிற்கு விண்ணப்பம் செய்பவர்கள் முதுகலை, MBA/CFA / CA / CMA ஆகியற்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஊதியம் : உதவி மேலாளர் பதவிக்கு அடிப்படை சம்பளமாக ரூ.50,925 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. உதவி மேலாளராக தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ரூ.50,925 முதல் ரூ.96,765 வரை சம்பளம் வழங்கப்படும். இவற்றுடன் DA, HRA, CCA ஆகியவை கூடுதலாக வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை : மருத்துவம் தவிர இதர பிரிவுகளுக்கு ஆன்லைன் தேர்வு, குழு கலந்துரையாடல், நேர்காணல் நடைபெறும். இவற்றில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்ட பின்னர் உதவி மேலாளராக தேர்வு செய்யப்படுவார்கள். மருத்துவ பிரிவிற்கான பணியிடங்களுக்கு 2 கட்ட நேர்காணல் நடத்தப்பட்டு தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை : விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் https://ibpsonline.ibps.in/gicionov24/ என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான முழு விவரங்களை https://www.gicre.in/ என்ற இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம்.
Read more ; Samuthirakani | ‘சமூக அக்கறைமிக்க படைப்பாளி’ நடிகர் சமுத்திரக்கனி பற்றி பலருக்கு தெரியாத தகவல்..!!