உங்கள் பட்டுப்புடவை, பல ஆண்டுகள் ஆனாலும் புதுசு போல் இருக்க வேண்டுமா? அப்போ இந்த பதிவு உங்களுக்கு தான்..
பொதுவாக நமது பழக்க வழக்கத்தின் படி, நமது பாரம்பரிய உடை என்றால் அது புடவை தான். என்னதான் மாடர்ன் பெண்கள் மற்ற உடைகளை அணிந்தாலும், பண்டிகை அல்லது வீட்டு விசேஷங்கள் வந்து விட்டால் பெரும்பாலும் புடவைகளை தான் கட்டுவார்கள். புடவைகளில் எண்ணற்ற வகைகள் உள்ளது. ஷிபான் சில்க், பட்டுப்புடவைகள், க்ரேப் சில்க், பனாரஸ் புடவைகள், பாந்தினி புடவை, கோட்டா புடவை என பல வகை புடவைகள் உள்ளது. இப்படி எத்தனை தான் பல ரகத்தில் புடவைகள் இருந்தாலும், பட்டுப் புடவைகளுக்கு என்றுமே ஒரு தனி இடம் உண்டு.
தரமான பட்டு நூல்களைக் கொண்டு வடிவமைக்கப்படும் இந்த பட்டுப் புடவைகளின் விலை சற்று அதிகம் தான். பல லட்சங்கள் வரை விலைபோகும் இந்த புடவைகளை பத்திரமாக வைத்துக்கொள்வது மிகவும் அவசியமான ஒன்று.. பொதுவாக பட்டுப்புடவைகள் எளிதில் நைந்து போகும் வாய்ப்புகள் உள்ளது. அதனால் பட்டுப்புடவையை கட்டாயம் நாம் முறைப்படி பராமரிக்க வேண்டும். உங்கள் பட்டு புடவைகளை பராமரிக்க சில டிப்ஸ்... பட்டுப்புடவைகளை பாதுகாப்பாக வைக்க காட்டன் துணிகளை பயன்படுத்தலாம். பிளாஸ்டிக் போன்றவற்றில் சேமித்து வைக்கும் போது பட்டுப் புடவைகள் சேதமடையும் வாய்ப்புகள் உள்ளது.
பட்டு புடவைகளை நீண்ட நாட்கள் மடித்து வைத்தால், புடவைகள் மடிக்கப்பட்ட இடங்களில் நைந்து போய் சேதம் ஏற்படும். எனவே, அடிக்கடி சேலையை எடுத்து சிறிது நேரம் வெயில் படாதவாறு உலர வைத்து மடிப்புகளை மாற்றி மடித்து வைக்க வேண்டும். பெரும்பாலும் பட்டுப்புடவைகளை ட்ரை க்ளீனிங் முறையில் சுத்தம் செய்வது சிறந்தது. பட்டுப்புடவைகளை நாம் கைகளில் துவைத்தால், தண்ணீர் பட்டு, அதன் நிறம் சாயம் ஜரிகையில் படியலாம். பின்னர் அந்த கரையை நீக்குவது மிக கடினமான ஒன்றாகி விடும். நீங்கள் டிரை கிளினிங் செய்தாலும், அதை அடிக்கடி செய்யகூடாது. 4-5 முறை புடைவையை உடுத்தி பிறகு தான் ட்ரைக்ளீனிங் செய்ய வேண்டும். அதற்க்கு இடையில், நீங்கள் கற்பூரம், நாப்தலின் போன்றவற்றை பயன்படுத்தலாம். இதனால் பூசிகள் வருவதையும் தடுக்கலாம்.
ஒரு வேலை நீங்கள் உங்கள் பட்டு புடவையை வீட்டிலேயே அயர்ன் செய்ய விரும்பினால், பட்டுப்புடவையின் மேல் மெல்லிய துணியை விரித்து அதன் பிறகு தான் அயர்ன் செய்ய வேண்டும். அப்போது தான் புடவைக்கு சூடு அதிகம் செல்லாது.
Read more: இந்த லட்டு சாப்பிடுங்க.. எத்தனை வயசானாலும் உங்களுக்கு மூட்டு வலியே வராது…