காசா-வில் உள்ள பள்ளி முகாமில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல்..!! - 100 க்கும் மேற்பட்டோர் பலி
காசாவில் உள்ள பள்ளி முகாமில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 100-க்கும் மேற்பட்டோர் பலியாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2023 முதல் இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காஸா பகுதியை ஆளும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே மோதல் நடைபெற்று வருகிறது. காஸாவின் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இதுவரை குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட 30 ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளனர். காசாவில் உள்ள பள்ளிகளில் போரினால் பாதிக்கப்பட்டவர்கள் முகாமிட்டுள்ள நிலையில், இந்த தாக்குதல் பள்ளி மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது.
கிழக்கு காஸாவின் தராஜ் மாவட்டத்தில் உள்ள பள்ளி ஒன்றின் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியதில் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். காசாவில் இதுவரை நடந்த தாக்குதலில் 477 பள்ளிகள் நேரடி தாக்குதலுக்குப் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக, ஐக்கிய நாடுகள் சபை கூறியுள்ளது. காஸாவின் போருக்கு முன்னர் 2.3 மில்லியன் மக்கள் தொகையில் தற்போது 1.9 மில்லியனுக்கும் குறைவாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Read more ; ‘அனைத்து நீதிபதிகளும் பதவி விலக வேண்டும்..!!’ வங்க தேசத்தில் மீண்டும் வெடித்த கலவரம்..