For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

BJP-யின் நம்பிக்கையில் மண்ணை அள்ளிப்போட்ட காயத்ரி..!! சர்வே முடிவு எங்கயோ போகுதே..!!

11:42 AM Apr 04, 2024 IST | Chella
bjp யின் நம்பிக்கையில் மண்ணை அள்ளிப்போட்ட காயத்ரி     சர்வே முடிவு எங்கயோ போகுதே
Advertisement

தமிழ்நாட்டில் 39 தொகுதிகளில் பாஜக ஒரு இடத்தில் கூட வெல்லாது என்று நடிகையும் அதிமுக நிர்வாகியுமான காயத்ரி ரகுராம் சர்வே நடத்தியுள்ளார்.

Advertisement

தமிழகத்தில் கணிசமான எம்பிக்களை நாடாளுமன்றத்திற்கு அனுப்புவோம் என்பதில் பாஜகவினர் உறுதியாக உள்ளனர். அதேபோல், தமிழ்நாட்டில் 19 தொகுதிகளிலும் பாஜக வெல்வதற்கான சாத்தியங்கள் இருப்பதாகவும், மக்கள் மாற்றத்தை விரும்புவதாகவும் பாஜகவினர் தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகின்றன. ஆனால், இதில் மண்ணை அள்ளி போடுவது போல் அதிமுக நிர்வாகி காயத்ரி ரகுராம் ஒரு கருத்து கணிப்பை வெளியிட்டுள்ளார்.

அவர் தனது எக்ஸ் தளத்தில், ”தென்னிந்தியாவில் பாஜகவுக்கு முட்டைதான் கிடைக்கும் என்கிறார். அதாவது ஆந்திரா, கேரளா, தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் பாஜக ஒரு இடங்களில் கூட வெல்லாது என தெரிவித்துள்ளார். மேலும், உத்தரப்பிரதேசத்தில் 65 இடங்களிலும், மத்தியப்பிரதேசத்தில் 24 இடங்களிலும் குஜராத்தில் 23 இடங்களிலும் வெல்லும் என குறிப்பிட்டுள்ள காயத்ரி, மற்ற மாநிலங்களில் பெரும்பாலும் ஒற்றை இலக்கங்களில் பாஜக வெல்லும் என தெரிவித்துள்ளார்.

அதிலும் திரிபுரா, உத்தரகாண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் 100 சதவீதம் வெற்றி கிடைக்கும் என தெரிவித்துள்ளார். வடமாநிலமான மணிப்பூரில் பூஜ்ஜியம் பெறும் என்று கணித்துள்ளார். மணிப்பூரில் பாஜக ஆட்சி நடைபெறுகிறது. இருப்பினும். அங்கு இருக்கும் இரு லோக்சபா தொகுதிகளில் ஒரு தொகுதியில் கூட பாஜக வெல்லாது என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மணிப்பூரில் நடந்த வன்முறை, பெண்களுக்கு நடந்த பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட விவகாரங்கள் நடந்த நிலையில் பிரதமர் மோடி, மணிப்பூருக்கு சென்று கூட பார்க்கவில்லை என்ற குற்றச்சாட்டு தேர்தலில் எதிரொலிப்பதாக சொல்லப்படுகிறது.

மொத்தம் உள்ள 543 லோக்சபா தொகுதிகளில் 214 தொகுதிகளில் மட்டுமே பாஜக வெல்லுமாம். பிரதமர் மோடி சொன்னது போல் 400க்கெல்லாம் வாய்ப்பே இல்லை என்பது போல் காயத்ரி குறிப்பிட்டுள்ளார். 543 இல் மேஜிக் நம்பரை பெற, ஒரு கட்சிக்கு 272 இடங்கள் தேவைப்படுகிறது. ஆனால், பாஜகவோ வெறும் 214 இடங்களில் மட்டுமே வென்று தோல்வியை சந்திக்கும் என காயத்ரி அதிரடியாக தெரிவித்துள்ளார்.

Read More : Earth | பூமிக்கு அடியில் இப்படி ஒரு அதிசயமா..? விஞ்ஞானிகள் கண்டுபிடித்த சீக்ரெட் கடல்..!!

Advertisement