முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் காயத்ரி ரகுராம்..? வெளியான பரபரப்பு தகவல்..!!

05:14 PM Dec 16, 2023 IST | 1newsnationuser6
Advertisement

பாஜக முன்னாள் உறுப்பினரும், நடிகையுமான காயத்ரி ரகுராம் காங்கிரஸ் கட்சியில் இணைய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

தமிழ் சினிமாவில் நடிகையாக இருந்து வந்தவர் காயத்ரி ரகுராம். முன்னதாக பாஜக கட்சியில் இருந்த இவருக்கும், சில பாஜக முக்கிய புள்ளிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த விவகாரத்தில் அண்ணாமலை ஒருதலைப்பட்சமாக செயல்படுவதாக குற்றம் சாட்டிய காயத்ரி ரகுராம், கட்சியை விட்டு வெளியேறினார். பின்னர் சமீப காலங்களில் தொடர்ந்து பாஜகவை விமர்சித்து வரும் அவர் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் செயல்பாடுகளுக்கு ஆதரவாகவும் பேசி வருகிறார்.

இந்நிலையில், இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய கட்சி பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், காங்கிரஸ் கட்சி தொடங்கி 138 ஆண்டுகள் ஆனதை நினைவு கூறும் விதமாக பொதுமக்கள், பாஜகவின் ஆட்சி மாற்றத்தை விரும்புபவர்கள் 138, 1,380, 13,800 என்று தங்களால் முடிந்த நிதியை அளிக்கலாம் என தெரிவித்திருந்தார். அதை தொடர்ந்து காங்கிரஸ் கட்சிக்கு 1,380 நன்கொடை அளித்துள்ளார் காயத்ரி ரகுராம்.

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர் "எங்களுக்கு புதிய தலைமுறை வேண்டும். ஆட்சி மாற்றம் வேண்டும். நாட்டிற்காக உயிரையே அர்ப்பணித்த ஒரு குடும்பத்தை சுயநலத்திற்காக இழிவுபடுத்தும் பாஜகவை நாங்கள் விரும்பவில்லை. எங்களுக்கு போலி சாமியார் வேஷம் வேண்டாம். வன்முறை, வெறுப்பு, பாலியல் துன்புறுத்தல், மோசடி, ஜனநாயகத்தை அபகரித்தல், இந்து மதத்தின் பெயரால் அரசியல் ஆகியவற்றை நாங்கள் விரும்பவில்லை. பிஜேபியை விரும்பாதவர்கள் மற்றும் பங்கேற்க விரும்புபவர்கள் நன்கொடை அளியுங்கள்" என்று தெரிவித்துள்ளார்.

இதனால் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் காயத்ரி ரகுராம் பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளில் இணையவோ அல்லது ஆதரவாக பிரச்சாரம் செய்யவோ வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags :
காங்கிரஸ் கட்சிகாயத்ரி ரகுராம்நாடாளுமன்ற தேர்தல்பாஜக
Advertisement
Next Article