For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

விண்கலத்தில் வாயுக்கசிவு..!! பூமிக்கு திரும்ப முடியாமல் சிக்கித் தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்..!! உண்மையை மறைத்த நாசா..?

Boeing and NASA send two astronauts to the International Space Station on a shuttle. But the news that there is a gas leak in the spaceship has caused a shock.
12:42 PM Jun 25, 2024 IST | Chella
விண்கலத்தில் வாயுக்கசிவு     பூமிக்கு திரும்ப முடியாமல் சிக்கித் தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்     உண்மையை மறைத்த நாசா
Advertisement

போயிங் நிறுவனமும், நாசாவும் 2 விண்வெளி வீரர்களை விண்கலம் ஒன்றில் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு அனுப்பியது. ஆனால், அந்த விண்கலத்தில் வாயுக் கசிவு இருப்பதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

விண்வெளிக்கு பயணிகளை அனுப்பும் சோதனை முயற்சியாக, போயிங் நிறுவனமும் நாசாவும் இணைந்து, இரண்டு விண்வெளி வீரர்களை Starliner என்னும் விண்கலத்தில் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு அனுப்பியது. அவர்களில் ஒருவர் இந்திய வம்சாவளியினரான சுனிதா வில்லியம்ஸ். சுனிதாவும் அவரது சக விண்வெளி வீரரான புட்ச் வில்மோரும் ஜூன் 13ஆம் தேதியே பூமிக்குத் திரும்பியிருக்க வேண்டும். ஆனால், அவர்கள் இதுவரை பூமிக்குத் திரும்பவில்லை. அதாவது, அவர்கள் இருவரும் 10 நாட்களாக விண்வெளி நிலையத்தில் சிக்கிக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

சுனிதாவும் வில்மோரும் சென்ற ஸ்டார்லைனர் விண்கலத்தில் வாயுக்கசிவு இருப்பதால், அவர்களால் பூமிக்குத் திரும்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதில், அதிர்ச்சியளிக்கும் விஷயம் என்னவென்றால், இந்த கசிவு குறித்த உண்மை நாசாவுக்கும் போயிங் நிறுவனத்துக்கும் ஏற்கனவே தெரியுமாம். இப்போது, சிறிய பிரச்சனை என கருதப்பட்ட அந்த பிரச்சனையால் விண்வெளி வீரர்கள் இருவரும் விண்வெளி நிலையத்தில் சிக்கிக் கொண்டுள்ளார்கள் என்கின்றன ஊடகங்கள்.

Read More : கூட்டணி பேச்சுவார்த்தையில் இறங்கிய விஜய்..!! சீமான், திருமாவுடன் ரகசிய பேச்சு..!! அதிர்ச்சியில் திமுக..!!

Tags :
Advertisement