'இனி சிலிண்டர் வாங்க அதிக பணம் செலவழிக்க தேவையில்லை'..!! சூப்பர் டிப்ஸ் இதோ..!!
உஜ்வாலா திட்டம் என்பது வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள பெண்களுக்கு சமையல் எரிவாயு இணைப்பு வழங்குவதற்காக கடந்த 2016ஆம் ஆண்டு மத்திய அரசால் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தில் ஏழை பெண்களுக்கு ரூ.300 மானியத்துடன் ரூ.529 என்ற விலையில் சிலிண்டர் விநியோகிக்கப்படுகிறது.
விண்ணப்பிப்பது எப்படி..? உஜ்வாலா திட்டத்தில் பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள 18 வயது நிரம்பிய பெண்கள் இத்திட்டத்தின் கீழ் சமையல் எரிவாயு இணைப்பு பெற விண்ணப்பிக்கலாம். மேலும், இதற்கு முன்பு சமையல் எரிவாயு இணைப்பு எடுக்காதவராக இருக்க வேண்டும். எஸ்.சி, எச்.டி, பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா மற்றும் அந்த்யோதயா அன்ன யோஜனா ஆகிய திட்டத்திற்கு கீழ் பயன்பெறும் பெண்கள், தேயிலை தோட்ட பழங்குடியின பெண்கள், வனப்பகுதியில் வசிக்கும் பெண்கள், தீவு மற்றும் ஏரி தீவுகளில் வசிக்கும் பெண்கள் மற்றும் 14 புள்ளிகள் அடிப்படையில் வறுமைக்கோட்டிற்கு கீழ் இருக்கும் பெண்கள் ஆகியவர்கள் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
ஆதார் அட்டை, ரேஷன் கார்டு மற்றும் வங்கிக் கணக்கு விவரங்கள் இத்திட்டத்தின் கீழ் கண்டிப்பாக தேவைப்படும் ஆவணங்களாக இருக்கிறது. உஜ்வாலா திட்டத்திற்கு நேரடியாக டீலரிடம் சென்றும் அல்லது https://www.pmuy.gov.in/ என்ற இணையதளம் மூலம் ஆன்லைனிலும் விண்ணப்பிக்கலாம். அதாவது, மேற்கண்ட இணையதளத்தில் சென்று Apply for PMUY Connection என்ற இடத்தில் அழுத்தியதும் திறக்கும் பக்கத்தில் உள்ள 3 கேஸ் நிறுவனங்களில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்ய வேண்டும்.
இதையடுத்து, பெயர் அல்லது பகுதி வாரியாக கேஸ் ஏஜென்சியை தேர்வு செய்து, அதில் உள்ள விண்ணப்பத்தில் ஆதார் எண், பெயர், வங்கி எண் உள்ளிட்டவற்றை பூர்த்தி செய்து, அடையாள ஆவணம், முகவரி ஆவணம், பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்தை பதிவேற்றம் செய்து ஒப்புதல் அளிக்க வேண்டும். பிறகு அந்த விண்ணப்பம் கேஸ் டீலருக்கு அனுப்பப்படும். அதற்கு ஒப்புதல் பெறப்பட்ட பின், குறைந்த விலையில் உங்களுக்கு கேஸ் சிலிண்டர் கிடைக்கும்.
Read More : மகளிர் உரிமைத்தொகை ரூ.1,000-க்கு கூடுதல் வட்டி..!! பெண்களே இந்த திட்டம் பற்றி தெரியுமா..?