முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

நடிகர் சங்கம் சார்பில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்..!! பிரசாதத்தை வாங்க மறுத்த நடிகர் கார்த்தி..!! விளாசும் நெட்டிசன்ஸ்..!!

A video of actor Karthi refusing to take prasad offered by the priest while celebrating Vinayagar Chaturthi has been released.
03:43 PM Sep 07, 2024 IST | Chella
Advertisement

நாடு முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னையில் நடிகர் சங்கம் சார்பில் இன்று விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. தென்னிந்திய நடிகர்கள் சங்கத்தின் பொருளாளராக உள்ள நடிகர் கார்த்தி தலைமையில் இந்த விழா நடைபெற்றது. இதில், அலங்காரம் செய்து வைக்கப்பட்ட விநாயகருக்கு அர்ச்சகர்கள் சிறப்பு பூஜை செய்தனர். இதையடுத்து, விழாவில் பங்கேற்றவர்களுக்கு நடிகர் கார்த்தி உள்பட சங்க நிர்வாகிகள் அன்னதானம் வழங்கினர்.

Advertisement

இந்நிலையில் தான் தற்போது இணையதளத்தில் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, விநாயகர் சதுர்த்தி கொண்டாடியபோது அர்ச்சகர் வழங்கிய பிரசாதத்தை நடிகர் கார்த்தி வாங்க மறுக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. இதுதான் தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது. அதாவது விநாயகர் சிலை அருகே வைத்து பூஜிக்கப்பட்ட பிரசாதத்தை அர்ச்சகர் எடுத்து நடிகர் கார்த்திக்கிற்கு தருகின்றனர். ஆனால், அதனை கார்த்தி வாங்காமல் மற்றவர்களுக்கு கொடுங்கள் என சைகை காட்டும் வகையில் அந்த வீடியோ அமைந்துள்ளது.

இதனை பார்க்கும் நெட்டிசன்கள் நடிகர் கார்த்திகை விமர்சனம் செய்து வருகின்றனர். ஆனால், உண்மை என்னவென்றால் நடிகர் கார்த்தி அர்ச்சகரிடம் இருந்து பிரசாதத்தை வாங்கி சாப்பிட்டுள்ளார். அதாவது விழாவில் பூஜைக்கு பிறகு முதலில் பாயாசம் மாதிரியான ஒரு பிரசாதம் வழங்கப்பட்டது. அதனை கார்த்தி வாங்கி சாப்பிட்டார். பிறகு பஞ்சாமிர்தம் போன்ற பிரசாதம் வழங்கப்பட்டது. அதனை தான் கார்த்தி வாங்காமல் மற்றவர்களுக்கு வழங்கும்படி கூறியுள்ளார். அதன்பிறகு தேங்காய், பழம் வழங்கப்பட்டது. அதனை கார்த்தி மறுக்காமல் வாங்கிக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More : இனி இன்ஸ்டாகிராம் போல் வாட்ஸ் அப்பிலும்..!! வருகிறது மாஸ் அப்டேட்..!! பயனர்கள் குஷி..!!

Tags :
கார்த்திநடிகர் சங்கம்விநாயகர் சதுர்த்தி
Advertisement
Next Article