For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

பாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்எல்ஏ! மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ்க்கு மேலும் பின்னடைவு!

07:55 PM Apr 30, 2024 IST | Mari Thangam
பாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்எல்ஏ  மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ்க்கு மேலும் பின்னடைவு
Advertisement

மத்திய பிரதேச காங்கிரஸ் கட்சியிலிருந்து 6 முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட ராம்நிவாஸ் ராவத் தன்னுடைய ஆதரவாளர்களுடன் இன்று மாநில முதல்வர் மோகன் யாதவ் முன்னிலையில் பாஜக-வில் இணைந்தார். ராகுல் காந்தி அம்மாநிலத்தில் பிரச்சாரம் செய்துவரும் நிலையில், ராம்நிவாஸ் பாஜகவில் இணைந்ததால் காங்கிரஸ் கட்சி அதிர்ச்சியடைந்துள்ளது.

Advertisement

இந்தூர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் வேட்புமனு தாக்கல் செய்த அக்சய் கண்டி பாம், நேற்று திடீரென தனது வேட்பு மனுவை திரும்பப் பெற்றதுடன் பாஜகவில் இணைந்தார். அந்த அதிர்ச்சியிலிருந்து காங்கிரஸ் கட்சி மீள்வதற்குள், ம.பியில் காங்கிரஸ் கட்சியிலிருந்து 6 முறை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ராம்நிவாஸ் ராவத் தன்னுடைய ஆதரவாளர்களுடன் இன்று மாநில முதல்வர் மோகன் யாதவ் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். அவருடன், காங்கிரஸைச் சேர்ந்த மொரேனா மாவட்ட மேயர் ஷர்தா சோலங்கியும் பாஜகவில் இணைந்தார்.

சியோபூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராம்நிவாஸ் ராவத் அந்த தொகுதியின் எம்எல்ஏ என்பது குறிப்பிடத்தக்கது. 1990, 1993, 2003, 2008, 2013 ஆகிய தேர்தல்களில் விஜய்பூர் தொகுதியில் இருந்து ராம்நிவாஸ் ராவத் எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டார். இதில் 1998ஆம் ஆண்டு தேர்தலில் தோல்வியடைந்தார். கடந்த 2018ஆம் ஆண்டு பாஜக வேட்பாளர் சீதாராமை எதிர்த்து போட்டியிட்டு 2 ஆயிரத்து 840 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார்.

தொடர்ந்து கடந்த 2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் பாஜக வேட்பாளர் நரேந்திர சிங் தோமரை எதிர்த்து போட்டியிட்ட போதும் 1,13,341 வாக்குகள் வித்தியாசத்தில் மொரேனா தொகுதியில் தோல்வியை சந்தித்தார். இதையடுத்து கடந்த 2023ஆம் ஆண்டு தேர்தலில் விஜய்பூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று தற்போது சட்டமன்ற உறுப்பினராக பதவி வகிக்கிறார்.

இந்தமுறை மக்களவைத் தேர்தலில் மொரேனா தொகுதியில் தனக்கு போட்டியிட வாய்ப்பளிக்கப்படும் என்று நம்பிய ராவத்துக்கு பதிலாக காங்கிரஸ் கட்சி சத்யபால் சிங் சிகர்வாருக்கு வாய்ப்பு வழங்கியது. அதில் ஏமாற்றமடைந்த ராவத், இன்று ராகுல் காந்தி அந்தப் பகுதியில் பிரச்சாரத்துக்கு வந்தபோது தன்னை பாஜகவில் இணைத்துக் கொண்டார்.

ராகுல் காந்தி பிரச்சாரத்துக்கு வந்ததால் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. மத்திய பிரதேச காங்கிரஸில் முக்கியத் தலைவராக இருந்த ராம்நிவாஸ் ராவத் பாஜகவில் இணைந்திருப்பது மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

Tags :
Advertisement