முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

Dairy Milk சாக்லேட்டில் பூஞ்சை தொற்று.!! அதிர்ச்சியில் உறைந்த ஹைதராபாத் நபர்.!! விளக்கமளித்த கேட்பரி நிறுவனம்.!!

07:56 PM Apr 29, 2024 IST | Mohisha
Advertisement

நீங்கள் காட்பரி டைரி மில்க்(Dairy Milk) சாக்லேட்டை ஆசையாக சாப்பிடுவதற்கு அதன் கவரை திறக்கும் போது உங்களது சாக்லேட் முழுவதும் பூஞ்சைகள் இருந்தால் எப்படி அருவருப்பாக உணர்வீர்கள்.! இது போன்று தான் ஹைதராபாத்தைச் சேர்ந்த ஒருவருக்கே விரும்பத் தகாத நிகழ்வு நடந்திருக்கிறது.

Advertisement

இது தொடர்பாக அந்த நபர் உடனடியாக தனது X சமூக வலைதளத்தின் மூலம் புகார் அளித்திருக்கிறார். மேலும் தனது புகார் உடன் பூஞ்சைகளுடன் கூடிய சாக்லேட்டின் புகைப்படத்தையும் பதிவேற்றி இருக்கிறார். இந்த சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு காட்பரி நிறுவனத்திடம் வேண்டுகோள் வைத்துள்ளார்.

இது தொடர்பாக தனது X வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள @goooofboll என்ற பயனர் பூஞ்சைகளால் சேதம் அடைந்த டெய்ரி மில்க்(Dairy Milk) சாக்லேட்டின் 4 புகைப்படங்களையும் பதிவு செய்திருக்கிறார். மேலும் சாக்லேட் கவரில் ஜனவரி 2024 தயாரிக்கப்பட்டது என குறிப்பிடப்பட்டிருக்கிறது. மேலும் இந்த சாக்லேட் தயாரிக்கப்பட்ட தேதியிலிருந்து 12 மாதங்கள் வரை கெட்டுப் போகாமல் இருக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை மேற்கோள் காட்டி இருக்கும் பயனர் ஜனவரி 2024 தயாரிக்கப்பட்ட சாக்லேட் தயாரிக்கப்பட்ட தேதியில் இருந்து 12 மாதங்கள் காலாவதியாகாமல் இருப்பதை பாருங்கள் என குறிப்பிட்டு இருக்கிறார்.

இவரது பதிவு இணையதள வாசிகளின் கவனத்தை பெற்றது. இது தொடர்பாக டெய்ரி மில்க் நிறுவனத்தை குறிப்பிட்டு பதிலளித்த நெட்டிசன் ஒருவர் இதுபோன்ற அனுபவம் எனக்கும் ஒரு முறை ஏற்பட்டிருக்கிறது. 100 ரூபாய்க்கு வாங்கிய டெய்ரி மில்க் சாக்லேட்டில் இதுபோன்று நடந்தது. என்ன செய்ய வேறு வழி இல்லாமல் அதை தூக்கி வீசினேன் என குறிப்பிட்டு இருக்கிறார். இது தொடர்பாக பதிலளித்த மற்றொரு நபர் கடைக்காரர் முறையாக குளிர்சாதன பெட்டியில் வைத்து பராமரிக்காததால் சாக்லேட் கெட்டுப் போய் இருக்கலாம் என பதிவிட்டு இருக்கிறார்.

இந்த சம்பவம் தொடர்பான புகாரை கேட்பரி ஒப்புக்கொண்டது. மேலும் விரும்பத்தகாத நிகழ்விற்கு வருத்தம் தெரிவிப்பதுடன், மொண்டலெஸ் இந்தியா ஃபுட்ஸ் பிரைவேட் லிமிடெட் (முன்னர் கேட்டபரி இந்தியா லிமிடெட்) மிக உயர்ந்த தரத்தை பராமரிக்க பாடுபடுகிறது என்று கூறியது. கவலையை நிவர்த்தி செய்ய தங்களைத் தொடர்பு கொள்ளுமாறு அந்த பயனரை கேட்டுக் கொண்டனர்.

Read More:

Baby is on The Way | “குழந்தை வந்துட்டு இருக்கு; மேட்ச்ச சீக்கிரம் முடிங்க…” சிஎஸ்கே-விடம் கோரிக்கை வைத்த சாக்ஷி தோனி.!!

Tags :
CadburyDairy MilkFungus in dairy milkHyderabad
Advertisement
Next Article