For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

மகிழ்ச்சி செய்தி...! முழுநேர Ph.D மாணவர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்...! தமிழக அரசு அறிவிப்பு...!

07:00 AM Nov 22, 2023 IST | 1newsnationuser2
மகிழ்ச்சி செய்தி     முழுநேர ph d மாணவர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்     தமிழக அரசு அறிவிப்பு
Advertisement

முழுநேர முனைவர் பட்டப்படிப்பை படிக்கும் மாணவர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம் செயற்படுத்தப்படும் முழுநேர முனைவர் பட்டப்படிப்பினை மேற்கொள்ளும் மாணாக்கர்களுக்கான கல்வி ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 2023-2024-ஆம் கல்வியாண்டில் முழுநேர முனைவர் பட்டப்படிப்பு (Ph.D) பயிலும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய கிறித்துவ ஆதிதிராவிடர் இன மாணாக்கர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.

Advertisement

திட்ட விண்ணப்பங்கள் விதிமுறைகள் மற்றும் மாதிரி விண்ணப்படிவம் www.tn.gov.in/forms/deptname/1 என்ற இணைய முகவரியில் பதிவிறக்கி பயன்படுத்திக்கொள்ளும் வண்ணம் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து பல்கலைக்கழகங்களுக்கும் தகவல் அனுப்பப்பட்டுள்ளது. அனைத்துப் முழுமையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 31.12.2023 நாளன்று மாலை 5.45 மணிக்குள்,"இயக்குநர், ஆதிதிராவிடர் நல இயக்குநரகம், எழிலகம் (இணைப்பு), சேப்பாக்கம், சென்னை-600 005" என்ற முகவரிக்கு வந்து சேரும் வண்ணம் அனுப்பி வைக்க வேண்டும். மேலும் முந்தைய கல்வியாண்டு விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ள இயலாது.

Tags :
Advertisement