’இனி இவர்களுக்கும் முழு உடல் பரிசோதனை’..!! சட்டப்பேரவையில் வெளியான அறிவிப்பு..!!
வயதான ஆசிரியர்களுக்கான முழு உடல் பரிசோதனைத் திட்டத்தை அனைத்து ஆசிரியர்களுக்கும் விரிவாக்கம் செய்து சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் தற்போது அரசுப் பள்ளிகள் தனியார் பள்ளிகளுக்கு இணையாக வளர்ந்து வருகின்றன. கல்வித் தரமும் அதிகரித்துள்ளது. மேலும் ஸ்மார்ட் போர்டு, அடையாள அட்டை, ஷூ சாக்ஸ், ஸ்போர்ட்ஸ் டிரஸ், உதவித்தொகை உள்ளிட்டவைகளும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கிடைக்கிறது. இதன் ஒரு பகுதியாக தமிழகம் முழுவதும் பணிபுரியும் அனைத்து அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கும் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை முழு உடல் பரிசோதனை செய்யப்படும் என சட்டமன்றத்தில் முதலமைச்சர் முக.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
இந்நிலையில், வயதான ஆசிரியர்களுக்கான முழு உடல் பரிசோதனைத் திட்டத்தை அனைத்து ஆசிரியர்களுக்கும் விரிவாக்கம் செய்து சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. வயதான ஆசிரியர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை செய்யும் திட்டம் நடைமுறையில் உள்ளது. இந்நிலையில், விரிவாக்கம் செய்யப்பட்ட இத்திட்டத்தால் முதற்கட்டமாக 50 வயதிற்கு மேற்பட்ட 35,600 ஆசிரியர்கள் பயன்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More : நீங்கள் ரேஷன் கடைக்கு எப்போது சென்றாலும் இதே பிரச்சனையா..? இந்த நம்பரை நோட் பண்ணுங்க..!!