முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு முழு உடல் பரிசோதனை..!! அரசாணை வெளியீடு..!!

11:55 AM Feb 14, 2024 IST | 1newsnationuser6
Advertisement

தமிழ்நாட்டில் தனியார் பள்ளிகளுக்கு இணையான கல்வித்தரத்தை அரசுப் பள்ளிகளில் வழங்க வேண்டும் என்ற முனைப்புடன் தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருகிறது. இதற்காக பல்வேறு திட்டங்கள் செயல்பாடுகளை நடைமுறைப்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு முழுவதும் பணிபுரியும் அனைத்து அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கும் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை செய்யப்படும் என சட்டப்பேரவையில் முதல்வர் முக.ஸ்டாலின் அறிவித்தார். இதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

Advertisement

அதன்படி, அரசுப் பள்ளிகளில் அனைத்து ஆசிரியர்களுக்கும் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை செய்யப்படும். இந்த அரசாணையில் பள்ளிக்கல்வித்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் அனைத்து தொடக்கப்பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள், அரசு உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் எண்ணிக்கை 37,588 ஆகும். இதில் பள்ளிகளில் பணிபுரியும் 50 வயதுக்கு மேற்பட்ட ஆசிரியர்களின் எண்ணிக்கை 1,06,985 ஆகும். இந்த ஆசிரியர்களுக்கு மட்டும் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை முதற்கட்டமாக மேற்கொள்ளப்படும்.

50 வயதுக்கு மேற்பட்ட அனைத்து வகை ஆசிரியர்களில் 1,06,985ல் மூன்றாக பிரித்து ஒவ்வொரு ஆண்டும் 35,600 ஆசிரியர்களுக்கு முழு உடல் பரிசோதனை மேற்கொள்ளப்படும். இந்த 35,600 ஆசிரியர்களுக்கும் கோல்டு திட்டத்தின் கீழ் ஒரு ஆசிரியருக்கு ரூ.1000 வீதம் ரூ.3.56 கோடி மட்டும் தேசிய ஆசிரியர் நல நிதியில் இருந்து விடுவிக்கப்படும். ஒவ்வொரு ஆண்டும் இந்த தொகையை தேசிய ஆசிரியர் நல நிதியில் இருந்து பெற்றுக் கொள்ளலாம். இதற்கான அதிகாரம் பள்ளிக்கல்வித்துறை இயக்குநருக்கு வழங்கப்படுவதாக அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
அரசுப் பள்ளிஆசிரியர்கள்தமிழ்நாடு அரசுமுழு உடல் பரிசோதனை
Advertisement
Next Article