தப்பியோடிய ஷேக் ஹசீனா..!! வங்கதேசத்தில் இடைக்கால அரசு இன்று பதவியேற்பு..!!
வங்கதேசத்தில் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு இன்று பதவியேற்க இருக்கிறது. வங்கதேசத்தின் நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் இடைக்கால பிரதமராக பதவியேற்கவுள்ளார். இவர், பிரதமர் அதிகாரத்துடன் பதவி ஏற்றாலும் பிரதமர் என்ற பெயர் இருக்குமா என்ற விவரம் வெளியாகவில்லை. அந்நாட்டின் தலைவர், புதிய அரசின் தலைமை ஆலோசகர் என்ற பெயரில் முகமது யூனுஸ் பதவி ஏற்பார்.
இதுதொடர்பாக அந்நாட்டின் ராணுவ தளபதி ஜெனரல் வாக்கர்-உஸ்-ஜமான் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதில், வங்கதேசத்தில் இடைக்கால அரசாங்கம் இரவு 8 மணிக்கு பதவியேற்கும். யூனுஸ் தலைமையிலான ஆலோசனைக் குழுவில் 15 உறுப்பினர்கள் இருப்பார்கள். இவர், இந்தியாவுக்கு ஆதரவான நிலைப்பாடு கொண்டவர். முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவும் இந்தியாவுக்கு நெருக்கம். தற்போது, யூனுஸ் உள்ளே வந்திருப்பது இந்தியாவுக்கு ஒரு வகையில் சாதகமாக பார்க்கப்படுகிறது.
அதே சமயம் இவர் அமெரிக்காவின் சிஐஏவிற்கும் மிகவும் நெருக்கமானவர். இவரை தேர்வு செய்ததற்கு பின் வேறு சில அரசியல் அழுத்தங்கள், சர்வதேச திட்டங்கள் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. நாட்டின் தற்போதைய பிரச்சனைகளை சமாளிக்க உதவுவதற்கு தயாராக இருப்பதாக முகமது யூனுஸ் கூறியுள்ளார். சொந்த நாட்டிற்கு திரும்பிச் செல்ல ஆவலுடன் காத்திருப்பதாகவும், சிக்கலில் இருந்து விடுபட என்ன எல்லாம் செய்யலாம் என்ற திட்டத்துடனும் இருக்கிறேன் என்றும் கூறியுள்ளார். இன்று வங்கதேசம் வரும் அவர், ராணுவ அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பின், இரவு பதவி பிரமாணம் செய்யப்படுவார்.
Read More : இனி அனைத்திற்குமே இந்த ஆவணம் முக்கியம்..!! நீங்க பதிவு பண்ணிட்டீங்களா..? கெடு எப்போது வரை..?