கவிழ்ந்த லாரியில் எரிபொருள் சேகரிப்பு..!! வெடித்து சிதறியதில் பலி எண்ணிக்கை 181ஆக உயர்வு..!!
நைஜீரியாவில் பெட்ரோல் டேங்கர் வெடித்ததில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 181ஆக உயர்ந்துள்ளது.
நைஜீரியாவின் தென் மேற்கில் உள்ள ஜிகாவா மாகாணத்தில் உள்ள மஜியாவில், எரிபொருள் ஏற்றிச்சென்ற டேங்கர் லாரி ஒன்று கடந்த 15ஆம் தேதி சாலையில் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. அப்போது, உடனே அப்பகுதியில் இருந்த ஏராளமானவர்கள், லாரியில் இருந்து கசிந்த எரிபொருளை சேகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
அப்போது, எதிர்பாராத விதமாக டேங்கர் வெடித்து சிதறியது. இந்த விபத்தில் தற்போது உயிரிழந்தோரின் எண்ணிக்கை 181ஆக உயர்ந்துள்ளது. மேலும், 100-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.
சரக்கு ரயில் போக்குவரத்து நைஜீரியாவில் தோல்வியடைந்ததால், சாலை மார்க்கமாக டேங்கர் லாரிகளில் எரிபொருள் எடுத்துச் செல்லப்பட்டு வருகின்றன. இதனால் அங்கு விபத்துகள் அடிக்கடி நிகழ்ந்து வருகிறது. தொடரும் விபத்துகளால், அங்குள்ள மக்கள் பீதியடைந்துள்ளனர்.
Read More : சென்னையில் நாளை (அக்.25) மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்..!! இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க..!!