'A1/A2' பால் விளம்பரங்களை தடை செய்யும் உத்தரவை வாபஸ் பெற்றது FSSAI!
FSSAI: பால் மற்றும் பால் பொருட்களில் ஏ1 மற்றும் ஏ2 வகைகளாக பிரித்து விளம்பரப்படுத்தக் கூடாது என்ற உத்தரவை இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் ஒழுங்குமுறை ஆணையமான "FSSAI" திரும்ப பெற்றது.
கடந்த 21ம் தேதி இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் ஒழுங்குமுறை ஆணையமான "FSSAI" பால் மற்றும் பால் பொருட்களில் ஏ1 மற்றும் ஏ2 வகைகளாக பிரித்து விளம்பரப்படுத்தக் கூடாது என்று வர்த்தக நிறுவனங்களுக்கு உத்தரவிட்டது. இதுபோன்ற விளம்பரங்கள் தவறான வழிநடத்துவதாக தெரிகிறது என FSSAI தெரிவித்தது.
இத்தகைய கருத்தாக்கங்கள் FSSAI-இன் உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலை சட்டம் 2006-க்கு முரணாக இருக்கிறது. இது தொடர்பாக FSSAI மேற்கொண்ட ஆய்வில் ஏ1 மற்றும் ஏ2 வேறுபாடு பாலில் உள்ள பீட்டா-கேசீன் புரதத்தின் கட்டமைப்போடு இணைக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
எனினும், தற்போதைய FSSAI விதிமுறைகள் இந்த வேறுபாட்டை அங்கீகரிக்கவில்லை. இதன் காரணமாக இத்தகைய வேறுபாடுகளை விளம்பரப்படுத்துவதை உணவுத்துறை வியாபாரம் செய்வோர் கைவிட வேண்டும் என்று FSSAI உத்தரவிட்டது. இதே போன்று ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களும் பால் வகைகளை ஏ1, ஏ2 என குறிப்பிடுவதை நிறுத்த வேண்டும் என்று FSSAI வலியுறுத்தி உள்ளது.
இது குறித்த நடவடிக்கையை எடுப்பதற்கு நிறுவனங்களுக்கு ஆறு மாத காலம் அவகாசம் அளிக்கப்பட்டு இருக்கிறது என்று தெரிவித்திருந்தது. இந்தநிலையில், பால் மற்றும் பால் பொருட்களை ஏ1 மற்றும் ஏ2 வகைகளாக விற்பனை செய்வதை நிறுத்த வேண்டும் என்று 21.8.2024 வெளியிடப்பட்ட தனது முந்தைய உத்தரவை திரும்பப் பெற்றுள்ளது.
Readmore: தடை எதிரொலி!. மெடிக்கலில் வாங்கும் மருந்து உண்மையானதா?. போலியானதா?. எவ்வாறு கண்டுபிடிப்பது?