முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

நாளை மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல தடை...! அதிகாரிகள் திடீர் உத்தரவு...! என்ன காரணம்...?

06:30 AM Feb 16, 2024 IST | 1newsnationuser2
Advertisement

பழவேற்காடு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம், வானிலை மற்றும் பேரிடர் எச்சரிக்கை தகவல்களை முன்கூட்டியே பெறுவதற்காக, 'GSLV-F 14 என்ற ராக்கெட் வடிவமைத்துள்ளது. இதனை, ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து நாளை மாலை 5.30 மணிக்கு இஸ்ரோ விண்ணில் ஏவுகிறது.

Advertisement

இதற்கான ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் மற்றும் செயற்கைகோள் தயார் நிலையில் உள்ளது. இந்த நிலையில், ராக்கெட்டுக்கான இறுதிக்கட்ட பணியான 27½ மணி நேர கவுண்ட்டவுன் இன்று தொடங்குகிறது. தற்போது பழவேற்காடு மீனவர்கள் நாளை கடலுக்கு மீன்பிடிக்க செல்ல தடை விதித்து மீன்வளத்துறை உத்தரவிட்டுள்ளது.

நாளை ஸ்ரீஹரிகோட்டாவில் GSLV-F 14 ராக்கெட் விண்ணில் ஏவப்பட்ட உள்ள நிலையில் பாதுகாப்பு கருதி மீனவர்கள் மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. வானிலை ஆய்வுக்கான இன்சாட்-3 டிஎஸ் செயற்கைக் கோள், GSLV-F 14 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட உள்ளது.

Tags :
central govtFishermanGSLVIsroRocket
Advertisement
Next Article