நாளை முதல் நீங்க நினைக்கிற மாதிரி சிம் கார்டு வாங்க முடியாது..!! புதிய விதிமுறைகள் அமல்..!!
சமீப காலமாகவே நாடு முழுவதும் பல்வேறு சிம் கார்டுகளை பயன்படுத்தி மோசடிகள் அரங்கேறி வருகின்றன. இந்த மோசடிகளை தடுக்கும் வகையில், மத்திய அரசு பல விதிமுறைகளை கொண்டு வந்ததோடு, மொபைல் சிம் கார்டுகளை விற்பனை செய்வதில் ஈடுபட்டுள்ள 67,000 டீலர்களை அரசாங்கம் தடைப் பட்டியலில் சேர்த்துள்ளது. மேலும், மோசடியாகப் பெறப்பட்ட 52 லட்சம் சிம் கார்டு இணைப்புகளை கண்டறிந்து செயலிழக்கச் செய்தது.
கடந்த 2023 மே மாதம் முதல் 300 சிம் கார்டு டீலர்கள் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. பல சிம் கார்டுகளை வாங்குவதற்கு விதிமுறைகளை கடினமாக்கி உள்ளது. அதிகரித்து வரும் மோசடிகளை கட்டுப்படுத்தும் நோக்கில் டிசம்பர் 1ஆம் தேதி முதல் நாடு முழுவதும் புதிய விதிமுறைகள் அமல்படுத்தப்பட உள்ளன.
அதாவது, காவல்துறை சரிபார்ப்பு மற்றும் பயேமெட்ரிக் சரிபார்ப்புக்கு பிறகே விற்பனையாளர்களுக்கு நிறுவனங்கள் சிம் கார்டுகளை விநியோகம் செய்ய வேண்டும். இந்த விதியை மீறிவோருக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்படும். ஏற்கனவே உள்ள எண்ணில் புதிய சிம்மிற்கு விண்ணப்பிக்கும்போது வாடிக்கையாளர்களின் ஆதார் கார்டு உள்ளிட்ட விவரங்கள் சரிபார்க்கப்படும்.
மொபைல் எண்ணின் இணைப்பு துண்டிக்கப்பட்டால், 90 நாட்கள் முடியும் வரை வேறு எந்த புதிய வாடிக்கையாளருக்கும் அந்த எண்ணில் சிம்கார்டை ஒதுக்கப்படக் கூடாது.
தனிநபர்கள் வணிக இணைப்பு மூலம் மட்டுமே மொத்தமாக சிம் கார்டுகளை பெற முடியும். புதிதாக சிம் கார்டு வாங்கும் நபரின் கேஒய்சி சரிபார்ப்பு செய்யப்பட வேண்டியது அவசியம். இதன் மூலம் தனிநபர்கள் 9 சிம்கள் வரை வாங்கலாம். ஆனால், மெத்தமாக சிம் கார்டுகளை வாங்க முடியாது. தொழில் நிறுவனங்களின் கேஒய்சி மற்றும் சிம் வாங்கும் தனிநபரின் கேஒய்சியும் சரிபார்ப்பு செய்யப்படும்.
புதிய விதிகளுக்கு இணங்க சிம் கார்டு விற்பனையாளர்கள் நவம்பர் 30ஆம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும். இல்லையென்றால், ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்படுவதோடு இல்லாமல் சிறைக்கு செல்லவும் கூடும் என்று மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. மேற்கண்ட விதிமுறைகள் டிசம்பர் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.