For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

இன்று முதல் 24-ம் தேதி வரை சூறாவளிக் காற்று 55 கி.மீ வேகத்தில் வீசும்..! வானிலை மையம் எச்சரிக்கை...!

From today to 24th, the wind speed of 55 kmph will be expected
07:59 AM Aug 22, 2024 IST | Vignesh
இன்று முதல் 24 ம் தேதி வரை சூறாவளிக் காற்று 55 கி மீ வேகத்தில் வீசும்    வானிலை மையம் எச்சரிக்கை
Advertisement

தமிழகத்தில் 27-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்; தென் தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை மிக தீவிரமாகவும், வட தமிழக உள் மாவட்டங்களில் தீவிரமாகவும் உள்ளது. இதன் காரணமாக நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி தென் தமிழக உள் மாவட்டங்கள் மற்றும் தென் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் வட தமிழக உள் மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களிலும், வட தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மழை பதிவாகியுள்ளது.

Advertisement

லட்சத்தீவை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்றுமுதல் 27-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் இன்று முதல் 24-ம் தேதி வரை சூறாவளிக் காற்று மணிக்கு 35 முதல் 45 கிமீ வேகத்திலும், இடையிடையே 55 கிமீ வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement