For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

"தலைவா முதல் சர்க்கார் வரை.." தளபதி விஜய்யின் அரசியல் சினிமா.! ஒரு ஷார்ட் ரிவ்யூ.!

04:13 PM Feb 02, 2024 IST | 1newsnationuser4
 தலைவா முதல் சர்க்கார் வரை    தளபதி விஜய்யின் அரசியல் சினிமா   ஒரு ஷார்ட் ரிவ்யூ
Advertisement

தளபதி விஜய் தனது ரசிகர் மன்றத்தை விஜய் மக்கள் இயக்கமாக மாற்றிய நாளிலிருந்து அவர் எப்போது அரசியலுக்கு வரப்போகிறார் என்ற கேள்வி எழுந்து கொண்டே இருந்தது. அதற்கான விடை இன்று கிடைத்திருக்கிறது. தளபதி விஜய் தனது அரசியல் கட்சியை தொடங்கி அதற்கான பெயரையும் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார். விஜயின் அரசியல் கட்சிக்கு தமிழக வெற்றி கழகம் என பெயரிடப்பட்டிருக்கிறது. ஜாதி மத பேதங்கள் இல்லாத லஞ்ச ஊழலற்ற ஆட்சியை பொதுமக்களுக்கு வழங்குவதே கட்சியின் பிரதான கொள்கை என தனது அறிக்கையில் தெரிவித்திருக்கிறார் தளபதி விஜய்.

Advertisement

இந்நிலையில் அவரது அரசியல் பயணத்திற்கான ஆரம்ப புள்ளி மற்றும் அரசியலை நோக்கி தளபதி விஜய் கடந்து வந்த பாதை பற்றி இந்தப் பதிவில் விரிவாக காணலாம். கமர்சியல் ஹீரோவாக சினிமா துறையில் வலம் வந்த தளபதி விஜய் தமிழன் திரைப்படத்தின் மூலம் மாஸ் ஹீரோவாக தன்னை நிலை நிறுத்த முயன்றார். அந்தத் திரைப்படத்திலிருந்து மக்களுக்கு நல்லது செய்யும் மாஸ் ஹீரோவாக தன்னை நிலை நிறுத்திக் கொண்டார். மேலும் பகவதி திரைப்படத்திற்கு பிறகு அவர் நடித்த அனைத்து திரைப்படங்களிலும் புரட்சித் தலைவர் மற்றும் முன்னாள் முதல்வரான எம்ஜிஆரின் சாயல் இருந்தது.

எனினும் விஜய் அரசியலுக்கு வரப்போகிறார் என்பதை பகிரங்கமாக அறிவித்த ஒரு திரைப்படம் என்றால் அது 'தலைவா' திரைப்படம் தான். அந்தத் திரைப்படத்தின் டைட்டிலுடன் 'Time To Lead' என்ற வாசகமும் இணைக்கப்பட்டிருக்கும். தமிழகத்தை வழி நடத்துவதற்கான நேரம் வந்துவிட்டது என்பதை மறைமுகமாக அறிவிக்கும் பொருட்டு 'Time To Lead' என்ற வாசகத்தை வைத்ததாகவும் அப்போதே பரபரப்பான பேச்சு அடிபட்டது. அந்தத் திரைப்படத்திற்கு பிறகு பல கமர்சியல் திரைப்படங்களில் நடித்திருந்தாலும் அவ்வப்போது மக்கள் மனதில் தோன்றும் ஒரு தலைவன் கதாபாத்திரத்தில் தவறாது நடித்து வந்தார் விஜய். குறிப்பாக கத்தி திரைப்படத்தில் மக்கள் பிரச்சனைக்காக போராடும் கதாபாத்திரத்தில் நடித்து அரசுத் துறைகளில் நடைபெறும் அநியாயம் மற்றும் லஞ்சம் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தினார். இதனைத் தொடர்ந்து மெர்சல் திரைப்படத்தை கூறலாம். அந்தத் திரைப்படத்தில் மக்களுக்காக தன் உயிரையும் தியாகம் செய்யும் ஒரு தலைவனாக நடித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து 2018-ல் வெளியான சர்க்கார் திரைப்படத்தில் அரசு வழங்கும் இலவச பொருட்களுக்கு எதிராக குரல் கொடுத்தார். அரசாங்கங்கள் இலவசங்களை கொடுத்து மக்களை ஏமாற்றுவதாக அந்தத் திரைப்படத்தின் கதை அமைந்திருக்கும். இதன் மூலம் தனது அரசியல் கருத்துக்கள் மற்றும் விருப்பங்கள் பற்றி தனது ரசிகர்களுக்கு தெரியப்படுத்தியதோடு மக்களிடமும் அரசியல் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தினார். இவையெல்லாம் ஒருபுறம் இருந்தாலும் தளபதி விஜயின் அரசியல் திட்டம் 2009 ஆம் ஆண்டு தொடங்கிவிட்டது.

2009 ஆம் வருடத்தில் தனது ரசிகர் மன்றங்களை விஜய் மக்கள் இயக்கமாக மாற்றி அதன் மூலம் பொது மக்களுக்கு சேவையாற்றி வந்தார். கடந்த சில வருடங்களாக விஜய் மக்கள் இயக்கம் அரசியல் பாதை பக்கம் திரும்ப தொடங்கியது. மேலும் தளபதி விஜய் நேரடி அரசியலுக்கு வர இருக்கிறார் என்பதை தெளிவுபடுத்தும் வகையில் விஜய் மக்கள் இயக்கத்தின் செயல்பாடுகளும் அமைந்தன. டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாளன்று ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள அம்பேத்கரின் சிலைக்கு விஜய் மக்கள் இயக்கத்தினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். மேலும் மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கிய அதனை மிகப்பெரிய விழாவாக கொண்டாடினர்.

மேலும் இதனைத் தொடர்ந்து உலக பட்டினி தினத்தை முன்னிட்டு தமிழகத்தின் 234 தொகுதியிலும் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக மதிய உணவு வழங்கப்பட்டது. விஜய் மக்கள் இயக்கத்தின் இது போன்ற நடவடிக்கைகள் தளபதி விஜய் அரசியலுக்கு வர இருக்கிறார் என்பதை உறுதிப்படுத்தியது. மேலும் மாணவ மாணவிகளுக்கு பரிசு வழங்கிய விழாவில் பேசிய விஜய் உங்கள் ஒவ்வொருவரின் கைகளிலும் தான் இந்த நாட்டின் தலையெழுத்தை மாற்றக்கூடிய ஆயுதம் இருக்கிறது என குறிப்பிட்டு பேசி இருந்தார்.

இந்நிலையில் 2024 ஆம் வருட பாராளுமன்ற தேர்தல் வருவதை முன்னிட்டு தனது அரசியல் கனவை நினைவாக்கி இருக்கிறார் தளபதி விஜய். இதனைத் தொடர்ந்து கட்சியின் பெயர் பதிவு செய்யப்பட்டு இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும் தனது கட்சியின் கொள்கை என்ன.? தங்களது அரசியல் கட்சியின் மூலம் சமூகத்தில் எந்த மாதிரியான மாற்றத்தை ஏற்படுத்தப் போகிறோம் என்பதனை தனது அறிக்கையின் மூலம் தெளிவுபடுத்தி இருக்கிறார் தளபதி விஜய். தமிழக அரசியலு களத்தில் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் போன்று தனித்துவமாக இருக்கப் போகிறாரா.? அல்லது அரசியல் கள உஷ்ணத்தில் அஸ்தமனம் ஆகிறாரா.? என்பது காலத்தின் கையில் இருக்கிறது .

Tags :
Advertisement