இந்தப் பிரச்சனைகளுக்கு இனி மருந்து, மாத்திரைகளே தேவையில்லை..!! வீட்டிலிருக்கும் பொருட்களை வைத்தே சரிசெய்யலாம்..!!
இன்றைய காலகட்டத்தில் பலரும் பலவித நோய்களால் பாதிக்கப்படுகின்றனர். வயதானவர்கள் மட்டுமின்றி, இளம் வயதினருக்கு கூட இதய பாதிப்பு, நுரையீரல், கல்லீரல் பிரச்சனை தொடர்பான நோய்கள் வருகின்றன. நோய்களின் ஆரம்ப வேரை கண்டறிந்து அதை நீக்குவதன் மூலம் பலவிதமான நோய்களை குணப்படுத்தலாம். அந்த வகையில், சில உடல்நலப்பிரச்சனைகளுக்கு மருந்து, மாத்திரைகளை எடுத்துக் கொள்ளாமல், வீட்டில் இருக்கும் சில பொருட்களை வைத்து எப்படி சரிசெய்யலாம் என்பதை இந்தப் பதிவில் பார்ப்போம்.
வயிற்றுப்போக்கு
சூடான பாலில் 1/4 தேக்கரண்டி வசம்பு தூள் சேர்த்து கலந்து குடித்து வர வயிற்றுப்போக்கு குணமாகும்.
தூக்கமின்மை
வாழை பழத்தை சிறு சிறு தூண்டுகளாக நறுக்கி சீரகம் சேர்த்து சாப்பிட்டு வந்தால், நிம்மதியான தூக்கம் கிடைக்கும்.
இரத்த சோகை
தினமும் ஒரு கிளாஸ் தேங்காய் பால் அருந்தி வந்தால், இரத்த சோகை பிரச்சனைக்கு தீரும்.
உடல் பருமன்
ஒரு கிளாஸ் சூடான நீரில் ஒரு தேக்கரண்டி அஸ்வகந்தா பொடி சேர்த்து குடித்து வந்தால், உடல் எடை குறையும்.
அஜீரணக் கோளாறு
ஒரு கிளாஸ் பாலில் சிறிது கசகசா சேர்த்து காய்ச்சி குடித்தால் செரிமானப் பிரச்சனை சரியாகும்.
எலும்பு தேய்மானம்
ஒரு ஸ்பூன் பாதாம் பிசினை இரவு முழுவதும் நீரில் ஊற வைத்து மறுநாள் ஒரு கிளாஸ் பாலில் போட்டு காய்ச்சி குடித்து வந்தால், உடல் எலும்பின் வலிமை அதிகரிக்கும்.
மலச்சிக்கல்
தினமும் காலையில் ஒரு கப் சாதம் வடித்த கஞ்சி இளஞ்சூட்டில் குடித்து வந்தால், குடலில் உள்ள மலக்கழிவுகள் அனைத்தும் வெளியேறி குடல் சுத்தமாகும்.
மன அழுத்தம்
செம்பு பாத்திரத்தில் நீர் அருந்தி வந்தால், மன அழுத்தம் நீங்கும்.
ஆஸ்துமா
ஆடாதோடை இலை ஒன்று மற்றும் ஊமத்தம் பூ ஒன்றை பாத்திரத்தில் போட்டு ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி காய்ச்சி வடிகட்டி குடித்து வந்தால் ஆஸ்துமா குணமாகும்.
தலைவலி
இரண்டு கிராம்பை தீயில் சுட்டு ஒரு காட்டன் துணியில் வைத்து கட்டி அதன் வாசனையை நுகர்ந்தால் தலைவலி குறையும்.
அதேபோல் தேயிலை தூள் பயன்படுத்தி தயாரிக்கப்படும் பிளாக் டீயில் 2 புதினா இலை போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி குடித்தால் தலைவலி குறையும்.
Read More : வரும் 13ஆம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..!! மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பால் மாணவர்கள் செம குஷி..!!