For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

ஸ்மிருதி இரானி முதல் எல்.முருகன் வரை..!! மக்களவை தேர்தலில் தோல்வியை தழுவிய மத்திய அமைச்சர்கள்..!!

Senior BJP leaders and Union Ministers have faced defeat in most of the places. Who are they? Let's see now.
08:21 AM Jun 05, 2024 IST | Chella
ஸ்மிருதி இரானி முதல் எல் முருகன் வரை     மக்களவை தேர்தலில் தோல்வியை தழுவிய மத்திய அமைச்சர்கள்
Advertisement

மக்களவை தேர்தல் முடிவுகள் பெரும் ஆச்சரியத்தை சில கட்சிகளுக்கும், அதிர்ச்சியை சில கட்சியினருக்கும் தந்துள்ளன. கருத்துக்கணிப்புகளை பொய்யாக்கும் விதமாக முடிவுகள் வெளிவந்துள்ளன. 370 தொகுதிகளுக்கு மேல் பாஜக வெற்றி பெறும் என கருத்துக்கணிப்புகளில் சொல்லப்பட்டது. ஆனால், பாஜகவுக்கு தற்போது தனிப்பெரும்பான்மை கூட கிடைக்கவில்லை. அதை விட முக்கியமான விஷயம் என்னவென்றால் பெரும்பாலான இடங்களில் பாஜக மூத்த தலைவர்களும், மத்திய அமைச்சர்களும் தோல்வியை தழுவியுள்ளனர். அவர்கள், யார்? என்று தற்போது பார்க்கலாம்.

Advertisement

ஸ்மிருதி இரானி:

கடந்த 2019இல் ராகுல் காந்தியை தோற்கடித்து அமேதி மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்ற ஸ்மிருதி இரானி, காங்கிரஸ் வேட்பாளர் கிஷோரி லால் சர்மாவிடம் 1.39 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தார். நேரு குடும்பத்தின் நெருக்கமானவராக கருதப்படுபவர் கிஷோரி லால் சர்மா.

ராஜீவ் சந்திரசேகர்:

கேரள மாநிலம் திருவனந்தபுரம் மக்களவைத் தொகுதியில் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான சசி தரூரிடம் தோல்வியை தழுவினார்.

அஜய் மிஸ்ரா தெனி:

மத்திய உள்துறை இணை அமைச்சராக இருப்பவர் அஜய் மிஸ்ரா தெனி. 2021 அக்டோபர் மாதம், லக்கிம்பூர் கெரியில் விவசாயிகள் மீது காரை ஏற்றி வன்முறையில் ஈடுபட்டதாக இவரது மகன் கைது செய்யப்பட்டார். கெரி மக்களவை தொகுதியில் போட்டியிட்ட சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த உத்கர்ஷ் சர்மாவிடம் தோல்வியை தழுவினார்.

வி. முரளிதரன்:

கேரளாவில் அட்டிங்கல் தொகுதியில் போட்டியிட்ட மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி. முரளிதரன், காங்கிரஸ் சிட்டிங் எம்.பி. அடூர் பிரகாஷிடம் தோல்வியை சந்தித்துள்ளார்.

அர்ஜூன் முண்டா:

ஜார்க்கண்டின் குந்தி மக்களவைத் தொகுதியில் மத்திய பழங்குடியின விவகாரத்துறை அமைச்சரும், சிட்டிங் எம்.பி.யுமான அர்ஜுன் முண்டா, காங்கிரஸ் வேட்பாளர் காளிசரண் முண்டாவிடம் தோல்வியை தழுவினார்.

எல். முருகன்:

தமிழ்நாட்டில் நீலகிரி மக்களவை தொகுதியில் போட்டியிட்ட எல். முருகன், முன்னாள் மத்திய அமைச்சரும் திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஆ. ராசாவிடம் தோல்வி அடைந்துள்ளார். 4 லட்சத்து 73 ஆயிரத்து 212 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

Read More : காதுகளுக்கு பட்ஸ் பயன்படுத்துறீங்களா..? மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும்..!!

Tags :
Advertisement