அட்ராசக்க.. இனி UPI மூலம் 5 லட்சம் வரை பணம் அனுப்பலாம்..!! செப்.16 முதல் புதிய விதி.. இத கட்டாயம் தெரிஞ்சுக்கோ..!!
யுபிஐ மூலம் பணப்பரிவர்த்தைகளை செய்யும் யூசர்களுக்கு இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் புதிய லிமிட்டை அமலுக்கு கொண்டு வந்துள்ளது. ஏற்கனவே, மருத்துவ கட்டணம், கல்வி கட்டணம் மற்றும் அரசுப் பத்திரங்கள் ஆகியவற்றுக்கு யுபிஐ லிமிட் மாற்றப்பட்டது. இப்போது, வரி செலுத்துவோருக்கான லிமிட்டையும் மாற்றி இருக்கிறது. அதாவது, மருத்துவ செலவு, கல்வி கட்டணம் ஆகியவற்றுக்கு யுபிஐ மூலம் பணம் செலுத்தினால், அதிகபட்சம் ரூ.1 லட்சம் மட்டுமே செலுத்த முடியும் என்று முதலில் நிர்ணயிக்கப்பட்டது.
இதை ரூ.5 லட்சத்துக்கு ஆர்பிஐ அதிகரித்தது. இந்த புதிய லிமிட்டை ஏற்கனவே இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் அமலுக்கு கொண்டு வந்தது. ஆனால், இப்போது, வரி செலுத்தற்கான லிமிட்டும் ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக மாற்றப்பட்டுள்ளது. இந்த புதிய விதிகள் செப்டம்பர் 15ஆம் தேதி முதல் அமலுக்கு கொண்டு வரப்பட்டன. இந்த புதிய லிமிட் மூலம் வரி செலுத்தவோருக்கு எந்தவித கூடுதல் கட்டணங்களும் வசூலிக்கப்படாது. ஆகவே, ரூ.5 லட்சம் பணம் அனுப்பினாலும், வரிகள் இல்லாமல் பரிவர்த்தனை செய்து கொள்ள முடியும். இந்த புதிய விதிகள் மட்டுமல்லாமல், யுபிஐ யூசர்கள் கனவிலும் நினைக்காத வகையில் யுபிஐ சர்க்கிள் விதிகளும் (UPI Circle Rules) கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்திய தேசிய கொடுப்பனவு கழகத்தின் இந்த யுபிஐ சர்க்கிள் விதிகளானது, ஒரு பேங்க் அக்கவுண்ட்டுக்கு ஒரு யுபிஐ அக்கவுண்ட் என்ற விதிகளை மாற்றி அமைத்துள்ளது. அதாவது, ஒரே பேங்க் அக்கவுண்ட் மூலம் குறைந்தபட்சம் 2 யுபிஐ அக்கவுண்ட்கள் முதல் அதிகபட்சம் 5 யுபிஐ அக்கவுண்ட்கள் வரையில் ஓப்பன் செய்து பயன்படுத்தி கொள்ள முடியும்.
இந்த பிரைமரி பயனர் வழக்கமாக பணம் அனுப்பும் நடவடிக்கையை செய்து கொள்ளலாம். ஆனால், செகண்டரி அக்கவுண்ட்களுக்கு அவரே பணம் அனுப்ப லிமிட் விதிக்க வேண்டும். மாதத்துக்கு அதிகபட்சம் ரூ.15,000 வரையில் பணம் அனுப்பி கொள்ள அனுமதி வழங்கலாம். இல்லையென்றால், ரூ.5000 அல்லது ரூ.10000 என்று லிமிட் ஆப்ஷன்களும் இருக்கின்றன. ஆகவே, இந்த யுபிஐ சர்க்கிள் விதிகள் மூலம் வீட்டில் இருக்கும் சிறியவர்களுக்கு யுபிஐ அக்கவுண்ட் ஓப்பன் செய்து கொடுக்க முடியும். அதே நேரத்தில் அவர்களுக்கு பேங்க் அக்கவுண்ட் தேவை இருக்காது. அதேபோல குறிப்பிட்ட லிமிட் வரையில் பணத்தை செலவழிக்க அனுமதி கொடுக்கப்படுவதால், எந்தவித சிக்கல்களும் அதில் ஏற்பட வாய்ப்பில்லை.
Read more : நெல்லையில் சோகம்.. ஆற்றில் குளிக்க சென்ற பள்ளி மாணவர்கள் மூன்று பேர் உயிரிழப்பு..!!