முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

இடுப்பு கொழுப்பை குறைப்பது முதல் குடல் புற்றுநோயை தடுப்பது வரை.. சிவப்பு அவலில் இவ்வளவு நன்மைகளா? 

From reducing waist fat to preventing colon cancer.. So many benefits of red aval?
07:49 AM Nov 27, 2024 IST | Mari Thangam
Advertisement

தினந்தோறும் நமக்கு தேவையான அத்தனை சத்துக்களுமே அவலில் நிறைந்திருக்கின்றன. அவ்வளவு ஏன்? குடல் புற்றுநோயை முற்றிலுமாக தடுத்து நிறுத்தக்கூடிய சக்தி கொண்டதுதான் இந்த அவல்.

Advertisement

சிவப்பு அவலில் இரும்புச்சத்து, கால்சியம், வைட்டமின், மாங்கனீஸ் என பல சத்துக்கள் அடங்கியிருப்பதால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடும் ஒரு உணவாக இது இருக்கிறது.அவல் என்பது பிரபலமான உணவு. சிவப்பு அவல் வெள்ளை அவல் என இரண்டு வகைப்படும். அவலில் நார்ச்சத்து, இரும்புச்சத்து, கால்சியம், வைட்டமின், மாங்கனீஸ் என அனைத்து சத்துக்களும் நிறைந்துள்ளது. அவலை பல விதமாக சமைத்து சாப்பிடலாம். அவலில் அப்படியே வெல்லம் மற்றும் தேங்காய் சேர்த்து சாப்பிட கொடுக்கலாம். இல்லையெனில் உப்புமா போல் செய்து சாப்பிடலாம். அவலில் இவற்றை தவிர பாயாசம், லட்டு, அவல் நெய் உருண்டை என ஸ்நாக்ஸாக சாப்பிடலாம்.

அவள் எப்படி தயாராகிறது? தட்டையான அரிசியால் செய்யப்படுவது தான் அவல். சிவப்பு அரிசியிலிருந்து தயார் செய்யப்படுவது சிவப்பு அவல். காலை மற்றும் மாலை வேளைக்கு ஏற்ற உணவு.

சத்துக்கள் : காலை உணவில் இந்த சிவப்பு அவலை உட்கொள்ளும்போது, அன்றைய தினத்துக்கு தேவையான அத்தனை சத்துக்களும் நமக்கு கிடைத்துவிடுமாம். ஒரு கப் அவலில், 250 கலோரிகள் உள்ளன.. வறுத்த அவலில் 333 கலோரிகள் உள்ளன.. எனவே, காலை உணவுக்கு மிகச்சிறந்த உணவாக அவல் உள்ளது. வழக்கமாக, பாலில் அவல் மற்றும் வெல்லம் சர்க்கரை கலந்து குழந்தைகளுக்கு சாப்பிட தருவார்கள்.. ஆனால், அவலை வேக வைக்காமல் வெல்லம் கலந்து குழந்தைகளுக்கு தந்தால், கூடுதல் ஆரோக்கியம் கிடைக்குமாம்.

சிவப்பு அவலில் இரும்புச்சத்து நிறைந்துள்ளதால் ரத்த சோகை வராமல் தடுக்கும். குறிப்பாக கர்ப்பிணி பெண்கள் தங்கள் கர்ப்ப காலத்தில் அவலை உட்கொள்ளலாம். மேலும் அவலை சாலட் போல செய்து எலுமிச்சைசாறு பிழிந்து சாப்பிடுவதன் மூலம் அவலில் இருக்கும் இரும்புச்சத்தை உடல் உறிஞ்சிவதற்கு உதவும்.

நீரிழிவு நோயாளிகளுக்கு அடிக்கடி பசியெடுப்பது வழக்கம் தான். அந்த நேரத்தில் அரிசி வகைகளை சாப்பிடாமல், அவலை சாப்பிட்டால் பசி அடங்கும். மேலும் அவல் சாப்பிடுவதால் ரத்த சர்க்கரை அளவு உயராது. சிவப்பு அவல் ரத்தத்தில் இருக்கும் கொழுப்பை கரைக்கும். உடல் எடை குறைக்க நினைப்பவர்கள் அல்லது உடல் பருமன் மூலம் உடல் உபாதைகளை சந்திக்கும் நபர்கள் அவலை எடுத்துக்கொள்ளலாம்.

அவலின் மற்றுமொறு சிறப்பு என்னெவென்றால் இதில் கலோரிகள் மிகவும் குறைவு. கலோரிகள் குறைவாக இருந்தாலும் அவல் சப்பிட்டால் பசியை கட்டுப்படுத்தும். ஆனால் ஒரு சிலர் அவலை வறுத்து வேர்கடலை உடன் சேர்த்து சாப்பிடுவார்கள். அப்படி சாப்பிடும் பொது கலோரிக்கள் அதிகமாகும். அவல் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மேலும் எலும்புகளை வலுவாக மாற்றி எலும்பு முறிவை தடுக்கும். சிவப்பு அவல் உடல் பலவீனமாக இருந்தால் சத்து கொடுத்து வலுவாக்கும். வளரும் குழந்தைகளுக்கு இது ஒரு சிறந்த உணவாகும். குழந்தைகளுக்கு கொடுக்கும் போது சிறுது அவலை பாலில் சேர்த்து நாட்டுச்சர்க்கரை, ஏலத்தூள், தேங்காய் துருவல் சேர்த்து கொடுக்கலாம்.

Read more ; “கள்ளக்காதலன் இருக்கும் போது, குழந்தை எதுக்கு”; 5 வயது மகளை துடிதுடிக்க கொலை செய்த கொடூர தாய்..

Tags :
benefits of red avalColon cancerreducing waist fat
Advertisement
Next Article