முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

பிரதமர் மோடி முதல் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வரை.. மாதச் சம்பளம் எவ்வளவு தெரியுமா..?

From Prime Minister Modi to Tamil Nadu Chief Minister Stalin.. Do you know how much is the monthly salary..?
03:36 PM Jan 08, 2025 IST | Mari Thangam
Advertisement

வேலை செய்யும் அனைவருக்கும் கூலி உண்டு. இது அனைவருக்கும் தெரியும். மேலும், நம்மை ஆளும் உயரதிகாரிகளுக்கு அரசு சம்பளம் எவ்வளவு தெரியுமா? இனி நமது மாநில முதல்வர்கள், பிரதமர்கள், குடியரசுத் தலைவர்கள், ஆளுநர்கள் எவ்வளவு சம்பளம் வாங்குகிறார்கள் என்று பார்ப்போம்.

Advertisement

இந்திய ஜனாதிபதியின் சம்பளம் : இந்தியக் குடியரசுத் தலைவர் மாதச் சம்பளமாக ரூ.5 லட்சம் பெறுகிறார். இதற்கு, பதவியில் இருப்பவர் எந்த வரியும் செலுத்த வேண்டியதில்லை.

துணை ஜனாதிபதி சம்பளம் : இந்திய துணை ஜனாதிபதி நாட்டின் இரண்டாவது மிக உயர்ந்த அரசியலமைப்பு பதவியை வகிக்கிறார். இப்பதவியில் இருப்பவர்களுக்கு மாதம் ரூ.4 லட்சம் சம்பளம் கிடைக்கும். இவை தவிர.. பல சலுகைகளும், வசதிகளும் வழங்கப்படுகின்றன. 

பிரதமரின் சம்பளம் : இந்தியப் பிரதமர் சுமார் ரூ. 2,80,000 அடிப்படை ஊதியம். நாடாளுமன்றத்தில் பட்ஜெட் முன்மொழிவின்படி ஒவ்வொரு ஆண்டும் பிரதமரின் சம்பளம் நிர்ணயிக்கப்படுகிறது. இது தவிர தங்குமிடம், வாகனம், பாதுகாப்பு என பல வசதிகளையும் பெறுவார்.

தமிழக கவர்னரின் சம்பளம் : இறுதியாக நடந்த கவர்னர்கள் மாநாட்டில் முன்பை விட மூன்று மடங்கு கவர்னர்களின் சம்பளம் உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பளத்தை அந்தந்த மாநில அரசாங்கங்கள் வழங்க வேண்டும். அப்படி இருக்கையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு 3.50 லட்சம் சம்பளம் வழங்கப்படுகிறது. அரசியலமைப்பு சட்டத்தின்படி ஒருங்கிணைந்த நிதியில் இருந்து ஆளுநர் செயலக பணிகள் மற்றும் பராமரிப்பு, கவர்னரின் தனிப்பட்ட தேவைகள் என அனைத்திற்கும் வருடம் தவறாமல் முறையாக நிதி வழங்கப்பட வேண்டும்.

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் சம்பளம் : ஒவ்வொரு மாநிலத்தில் சட்டசபை உறுப்பினர் மற்றும் முதலமைச்சருக்கு அடிப்படை சம்பளம் மற்றும் கொடுப்பனைக்கள் வழங்கப்படுகிறது. அந்த வகையில் தமிழ்நாட்டின் முதலமைச்சர் பதவிக்கு ஒரு மாதத்திற்கு சம்பளமாக ரூ.2,05,000 வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.

சட்டமன்ற உறுபினர்களின் சம்பளம் : சட்டசபை உறுப்பினர்களுக்கு ஒரு மாதத்திற்கு அடிப்படை சம்பளம் ரூ.30,000, டெலிபோன், தபால், வாகனம் உள்ளிட்ட கொடுப்பனைகள் சேர்த்து ரூ. 75,000 வழங்கப்படுகிறது. மொத்தம் ரூ.1,05,000 சம்பளமாக வழங்கப்படுகிறது.

இந்திய தலைமை நீதிபதி சம்பளம் : இந்திய தலைமை நீதிபதி மாதம் ரூ. 2.80 லட்சம் சம்பளம் பெறுகிறார். இந்த சம்பளம் 2018 இல் திருத்தப்பட்டது. தலைமை நீதிபதியின் சம்பளம் அவரது பொறுப்புகள் மற்றும் நீதித்துறையின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் சம்பளம் : உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மாதம் ரூ.2.50 லட்சம் சம்பளம் பெறுகின்றனர். நீதிபதிகள் டெல்லியில் அரசு தங்குமிடத்தைப் பெறுகிறார்கள், இது அவர்களின் பதவிக்காலத்தில் வழங்கப்படுகிறது. நீதிபதிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு இலவச மருத்துவ வசதி வழங்கப்படும்.

ஐஏஎஸ், ஐபிஎஸ் சம்பளம் : ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளின் சம்பளம் அவர்களின் பதவிக்கு ஏற்ப மாறுபடும். அதை மத்திய அரசு முடிவு செய்யும். அவர்களின் பதவிக்கு ஏற்ப ரூ.50000 முதல் ரூ.250000 வரை சம்பளம் பெறுகிறார்கள்.

பாராளுமன்ற உறுப்பினரின் சம்பளம் : இந்திய நாடாளுமன்றத்தில் பணிபுரியும் எம்.பி.யின் மாத அடிப்படை சம்பளம் ரூ. 1 லட்சம். இது தவிர, தொலைபேசி மற்றும் இணையத்தில் செலவழிக்க கொடுப்பனவு வழங்கப்படுகிறது. ரயில், விமானம் அல்லது பிற போக்குவரத்து வழிகளில் பயணம் செய்வதற்கான கொடுப்பனவு பணித் துறையில் பயணம் செய்ய வழங்கப்படுகிறது.

Read more ; திருமணத்திற்கு பின் பெண்களின் உடல் எடை அதிகரிக்க உடலுறவு காரணமா? – நிபுணர்கள் விளக்கம்

Tags :
Chief minister stalinmonthly salaryPrime Minister Modi
Advertisement
Next Article