பவன் கல்யாண் முதல் கங்கனா ரனாவத் வரை!… தேர்தல் களத்தில் வெற்றி வாகை சூடிய சினிமா நட்சத்திரங்கள்!
Film Stars: நாடு முழுவதும் 542 மக்களவைத் தொகுதிகளில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி வ விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது இந்த தேர்தலில் போட்டியிட்ட சினிமா பிரபலங்கள் பலர் வெற்றி வாகை சூட்டியுள்ளனர்.
இந்தியாவில் மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று முடிந்த நிலையில் இன்று நாடு முழுவதும் வாக்கு என்னும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது . இந்த தேர்தலில் பல்வேறு திரை பிரபலங்கள் பல பிரதான கட்சிகளில் இணைந்து போட்டியிட்டு இருக்கின்றனர்.
அந்தவகையில் ஆந்திர சட்டமன்ற தேர்தலில் ஹிந்துபூர் தொகுதியில் போட்டியிட்ட நடிகர் பாலகிருஷ்ணா 31 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இதேபோல் நடிகர் பவன் கல்யாண் எம்எல்ஏ தேர்தலில் 70 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று மாபெரும் வெற்றியை பதிவு செய்துள்ளார் . இதேபோல் பாஜக சார்பில் ஹுமாச்சல பிரதேசத்தில் போட்டியிட்ட நடிகை கங்கனா ரணாவத் அதிக வாக்குகள் பெற்று வெற்றி வாகை சூட்டியுள்ளார் . தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் விக்ரமாதித்யா சிங்கை விட74,755 வாக்குகள் வித்தியாசத்தில் கங்கனா வெற்றிபெற்றார்.
கேரள மாநிலத்தில் நடைபெற்ற எம்பி தேர்தலில் பிரபல மலையாள நடிகர் சுரேஷ் கோபி அதிக வாக்குகள் பெற்று முன்னணியில் உள்ளார் அவரது வெற்றியும் ஏறத்தாழ உறுதி ஆகி உள்ளதாக கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன . இதேபோல், ராமாயணம் தொலைக்காட்சி தொடரில் ராமராக நடித்து பிரபலமான அருண் கோயல், பாஜக சார்பில் உத்திரபிரதேசம் மீரட் தொகுதியில் போட்டியிட்ட சமாஜ்வாதி கட்சியை விட 10,585 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிப்பெற்றுள்ளார்.
ஹிந்தி சினிமாவின் கனவு கன்னியாக வளம் வந்த ஹேமமாலினி அரசியலிலும் மூன்றாவது முறையாக வெற்றிவாகை சூடியுள்ளார். உ.பி. மதுரா தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட ஹேமமாலினி, 2,93,407 என்ற வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளரை தோற்கடித்தார்.
இதேபோல், மேற்குவங்கம் ஆசன்சோல் தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட நடிகர் சத்ருகன் சின்ஹா, டெல்லி வடகிழக்கு மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட போஜ்பூரி சூப்பர் ஸ்டார் மனோஜ் திவாரி, உ.பி. கோரக்பூர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட திரைப்பட தயாரிப்பாளர், தொலைக்காட்சி தொகுப்பாளர், நடிகர் என பன்முக தன்மை கொண்ட ரவி கிஷண் ஆகியோரும் வெற்றிவாகைசூடினர்.
Readmore: 6 செகண்ட் முத்தம், 20 செகண்ட் கட்டிபிடியுங்கள்!… உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு நல்லது!