முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

விஜயின் அரசியல் பயணம் தொடரட்டும்.. ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் வாழ்த்து..!!

From one actor-politician to another: Pawan Kalyan hails Vijay's maiden rally
07:57 PM Oct 28, 2024 IST | Mari Thangam
Advertisement

நடிகர் விஜய்யின், தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் நேற்று (27-10-24) நடைபெற்றது. அந்த கூட்டத்தில் த.வெ.க தலைவர் விஜய் தவெகவின் பெயர்க்காரணம், கட்சியின் கொள்கைப்பாடல், கொடியின் நிறம், தவெகவின் நிலைப்பாடு, கோட்பாடுகள், கட்சியின் கொள்கைகள் போன்றவற்றை அக்கட்சியின் தலைவர் விஜய் கூறியிருந்தார்.

Advertisement

பிரித்தாலும் பிளவுவாத அரசியல் சித்தாந்தம், ஊழல் மலிந்த அரசியல் ஆகியவை தான், தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் எதிரி என்று கூறியிருந்தார். இது தற்போது அரசியல் களத்தில் பேசு பொருளாக மாறியிருக்கிறது. மாநாட்டில் விஜய் பேசியது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் விஜய்யின் அனல் பறந்த பேச்சுக்கு அரசியல் தலைவர்கள் ஆதரவு மற்றும் விமர்சனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் நடிகரும் ஆந்திர துணை முதல்வருமான பவன் கல்யாண் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது  தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து பதிவில், துறவிகள் மற்றும் சித்தர்களின் பூமியான தமிழ்நாட்டில் விஜய் ஒரு அரசியல் பயணத்தைத் தொடங்கியதற்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

Read more ; AI உடன் காதல்.. Chatbot உடன் சேர்ந்து வாழ உயிரை மாய்த்துக்கொண்ட 14 வயது சிறுவன்..!!

Tags :
DMK of corruptionheartfelt congratulationspawan kalyantvktvk vijay
Advertisement
Next Article