”இனி கேமரா வழியாக எதை பார்த்தாலும் கருத்து சொல்லும்”..!! சாட்ஜிபிடியில் இப்படி ஒரு அசத்தல் அப்டேட்டா..?
ChatGPT: சாட்ஜிபிடி இப்போது ஏஐ துறையில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. சாட்ஜிபிடி நிறுவனத்தை உருவாக்கியது ஓபன் ஏஐ நிறுவனமாகும். இதில் மைக்ரோசாப்ட் மிகப் பெரியளவில் முதலீடு செய்துள்ளது. மறுபுறம் அதற்குப் போட்டியாகக் கூகுள் நிறுவனமும் ஏஐ மாடலை உருவாக்கியது. அதில் கூகுள் வெளியிட்டுள்ள புது ஏஐ மாடல் மிகப் பெரிய ஒரு போட்டியாக இருந்துவருகிறது.
கடந்த 2023ம் ஆண்டின் தொடக்கத்தில், ஓபன் ஏஐ நிறுவனம் சாட் ஜிபிடி மாடலை அறிமுகப்படுத்தியது. இது பல பல புதிய சாதனைகளைப் படைத்து நம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. குறிப்பிட்ட விஷயம் என்று இல்லாமல் பல்வேறு துறைகளிலும் சாட் ஜிபிடி சிறப்பாகவே இருந்தது. இனி சாட் ஜிபிடி தான் ஏஐ லீடர் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கும் போதே கூகுள் தனது சொந்த ஏஐ மாடலான ஜெமினியை இப்போது களமிறக்கியது.
அந்தவகையில், இதுவரை கூகுள் உருவாக்கியதிலேயே இதுதான் வலிமையான ஒன்றாக ஜெமினி திகழ்ந்து வருகிறது. இந்தநிலையில், இதற்கே டஃப் கொடுக்கும் வகையில், ஒப்பன் ஏஐ (OpenAI) நிறுவனமானது இன்னொரு அட்வான்ஸ்டு அம்சத்தை சாட்ஜிபிடியில் அறிமுகம் செய்துள்ளது. சாட்ஜிபிடியில் அட்வான்ஸ்டு வாய்ஸ் மோட் என்கிற புதிய அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த அம்சம் லைவ் கேமரா என்றும் அழைக்கப்படுகிறது.
மேலும் இந்த அம்சம் விரைவில் பீட்டா வெர்ஷனுக்கு வரும் இந்த புதிய லைவ் கேமரா அம்சமானது, சாட்ஜிபிடி-க்கு பார்க்கும் திறனை வழங்கும். அதாவது நிகழ்நேரத்தில் பயனர்களின் சுற்றுப்புறங்களை "பார்க்கவும்", அதனுடன் ஈடுபடவும் அனுமதிக்க உள்ளது. சாட்ஜிபிடி ஆப்பில் உள்ள கேமரா ஐகானைகிளிக் செய்வதன் மூலம் பயனர்கள் இந்த அம்சத்தை செயல்படுத்த முடியும். இதை ஆக்டிவேட் செய்ததும், சாட்ஜிபிடி ஏஐ ஆனது உங்கள் ஸ்மார்ட்போன் கேமரா வழியாக எதை பார்த்தாலும் அது தொடர்பான கருத்துகளை வழங்கும்.
பார்க்கும் திறன்களை சேர்ப்பதன் மூலம் சாட்ஜிபிடி ஆல் இப்போது பொருட்களையும் நபர்களையும் அடையாளம் காணவும், பெயர்களை நினைவில் கொள்ளவும், சுற்றுச்சூழலில் உள்ள பொருட்களுக்கு இடையே தொடர்புகளை ஏற்படுத்தவும் முடியும். எடுத்துக்காட்டாக, ஜிபிடி4ஓ நிகழ்வின் போது காட்டப்பட்ட ஒரு டெமோவில், சாட்ஜிபிடி ஆனது ஒரு நாயை அடையாளம் கண்டுகொள்வது, அதன் பெயரை நினைவுபடுத்துவது, பந்தை கண்டறிவது, மற்றும் ஃபெட்ச் விளையாட்டை புரிந்துகொள்வது போன்றவைகளை செய்தது. திகிலான விஷயம் என்னவென்றால்.. இது அனைத்தும் எந்தவிதமான இன்புட்டும் இல்லாமல் நடந்ததது.
முன்னரே குறிப்பிட்டபடி, ஜிபிடி4ஓ (GPT4o) வெளியீட்டின் போது அறிவிக்கப்பட்ட இந்த அம்சம் அட்வான்ஸ்டு வாய்ஸ் மோட்-ல் கட்டமைக்கப்பட்டுள்ளது. இது சாட்ஜிபிடி இடையேயான இயற்கையான உரையாடல்களை நிகழ்த்த அனுமதிகும் என்றும் ஓப்பன்ஏஐ நிறுவனம் நம்புகிறது.
Readmore: டிஜிட்டல் உலகிலும் மவுசு குறையாத டிவி!. இன்று உலகத் தொலைக்காட்சி தினம்!. சுவாரஸிய தகவல்!