முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

Ration: இனி அனைத்து பொருட்களும் ஒரே தவணையில் கிடைக்கும்!… கூட்டுறவு துறை அதிரடி உத்தரவு!

06:48 AM Mar 07, 2024 IST | 1newsnationuser3
Advertisement

Ration: ஒரே தவணையில், அனைத்து பொருட்களையும் வழங்க வேண்டும் என்று ரேஷன் ஊழியர்களுக்கு, கூட்டுறவு மற்றும் உணவுத் துறை அதிரடியாக உத்தரவிட்டிருக்கிறது.

Advertisement

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு மாதம் தோறும் குறைந்த விலையில் அரிசி, பருப்பு, எண்ணெய், கோதுமை, சர்க்கரை போன்ற பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.தமிழக அரசு விநியோகிக்கும் இந்த பொருட்களினால், அவர்களின் வாழ்வாதாரமும் தொடர்ந்து காக்கப்பட்டு வருகின்றன.. இதனை தவிர, பண்டிகை காலங்களில் தீபாவளி, பொங்கல் பரிசு உள்ளிட்ட நிதியுதவிகள் உட்பட அரசின் மற்ற நலத்திட்ட உதவிகளும் ரேஷனில் வழங்கப்படுகின்றன..

தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்கள் அனைவருக்கும் பல சலுகைகளை தமிழக அரசு செய்து வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் பொது மக்களுக்கு ஏதாவது புகார்கள் இருந்தால் அதை உடனடியாக தெரிவிக்க இலவச எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு தேவையான அனைத்து பொருட்களையும் ரேஷன் கடை ஊழியர்கள் ஒரே நேரத்தில் வழங்காமல் பொதுமக்களை தினமும் கடைக்கு வர வைக்கின்றனர். இந்நிலையில் ரேஷன் கடை ஊழியர்களுக்கு கூட்டுறவு துறை அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

வெயில் காலம் துவங்கிவிட்டதால், பொதுமக்களுக்கு இதனால் தேவையில்லாத அலைச்சல் வந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான், ஒரே தவணையில், அனைத்து பொருட்களையும் வழங்க வேண்டும் என்று ரேஷன் ஊழியர்களுக்கு, கூட்டுறவு மற்றும் உணவுத் துறை அதிரடியாக உத்தரவிட்டிருக்கிறது. கார்டுதாரர்களை அலைக்கழிக்காமல் ஒரே தவணையில், அரிசி உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் வழங்க வேண்டும் என்றும், அதற்கேற்றவாறு, கடைகளுக்கு முழு அளவில் பொருட்களை அனுப்புமாறும் நுகர்பொருள் வாணிப கழகத்திடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Readmore:  69 மருந்துகளுக்கான விலை உச்சவரம்பு…! தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் அதிரடி உத்தரவு…!

Tags :
அனைத்து பொருட்களும் ஒரே தவணையில்கூட்டுறவு துறை அதிரடி உத்தரவுரேசன் பொருட்கள்
Advertisement
Next Article