சிறுநீரக கற்களா.? உயர் ரத்த அழுத்தமா.? கவலை வேண்டாம்.! ஒரு வாழைத்தண்டு போதும்.! எல்லாவற்றிற்கும் தீர்வு.!
வாழைமரம் மனிதனுக்கு பல்வேறு நன்மைகளை தரக்கூடிய மரங்களில் ஒன்றாகும். இதன் இலை, காய் கனிகள், தண்டு பூ என அனைத்துமே மனிதனுக்கு உணவாகவும் ஆரோக்கியத்திலும் பயன்படக்கூடிய ஒன்றாக இருக்கிறது. குறிப்பாக வாழை மரத்தின் தண்டு மனிதர்களின் நல்வாழ்விற்கு தேவையான பல மருத்துவ பண்புகளை உள்ளடக்கியது. இவற்றில் வைட்டமின்கள் நார்ச்சத்துக்கள் பொட்டாசியம் ஆகியவை நிறைந்து இருக்கிறது.
வாழை மரத்தண்டு சிறுநீர் கற்கள் பிரச்சனை மற்றும் சிறுநீர் பாதை தொற்று ஆகியவற்றிற்கு சிறந்த மருந்தாக பயன்படுகிறது. இவற்றில் பொட்டாசியம், வைட்டமின் பி6 மற்றும் டையூரிடிக் பண்புகள் நிறைந்திருக்கிறது. சிறுநீரக கற்களால் அவதிப்படுபவர்கள் வாழைத்தண்டு சாரை குடித்து வந்தால் சிறுநீர்க் கற்கள் எளிதாக கரைந்து வெளியேறும். மேலும் சிறுநீரகப் பாதையில் ஏற்படும் தொற்றுக்களுக்கும் வாழைத்தண்டின் சாறு சிறந்த மருந்தாகும்.
வாழைத்தண்டில் பொட்டாசியம் நிறைந்து இருக்கிறது. இது நம் உடலில் உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. வாழைத்தண்டை நம் உணவில் தினமும் எடுத்துக் கொள்வதன் மூலம் உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தலாம். மேலும் இவற்றில் இருக்கக்கூடிய வைட்டமின் பி6 நம் உடலில் இரும்புச் சத்து உற்பத்தியிலும் ஹீமோகுளோபின் உருவாக்கத்திலும் முக்கிய பங்கு வகிக்கிறது. இவற்றைத் தொடர்ந்து பயன்படுத்தி வருவதால் ரத்த சோகை ஏற்படாமல் தடுப்பதோடு ரத்த ஓட்டத்தையும் சீராக்குகிறது.
நார்ச்சத்துக்கள் நிறைந்திருக்கும் வாழைத்தண்டு செரிமான கோளாறு மற்றும் அஜீரண பிரச்சனைகளை சரி செய்கிறது. இவற்றில் இருக்கக்கூடிய நார்ச்சத்துக்கள் உடலின் வளர்ச்சிதை மாற்றத்தை தூண்டுகின்றன. இதன் காரணமாக கெட்ட கொழுப்புகள் உடலில் தங்குவது தடுக்கப்படுகிறது. உடல் எடை குறைப்பிலும் வாழைத்தண்டு முக்கிய பங்கு வகிக்கிறது.