ஜானி பேர்ஸ்டோ முதல் தேவ்தத் படிக்கல் வரை!. ஐபிஎல் ஏலத்தில் விலைப்போகாத ஜாம்பவான்கள் பட்டியல்!
IPL auction: ஐபிஎல் 2025 இன் மெகா ஏலத்தில் ஜானி பேர்ஸ்டோ முதல் படிக்கல் வரை விற்கப்படாத வீரர்கள் யார் யார் என்பது குறித்து தெரிந்துகொள்வோம்.
ஐபிஎல் 2025 மெகா ஏலம் சவுதி அரேபியாவின் ஜெட்டாவில் நடந்து வருகிறது. இந்த மெகா ஏலத்தில் பல வீரர்கள் எதிர்பார்த்ததை விட அதிக பணம் பெற்றுள்ளனர். இருப்பினும் பல நட்சத்திர வீரர்கள் ஏலத்தில் விற்கப்படாததது ரசிகர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்தவகையில், தேவ்தத் படிக்கல் - அடிப்படை விலை - ரூ 2 கோடி, டேவிட் வார்னர் - அடிப்படை விலை - ரூ 2 கோடி, ஜானி பேர்ஸ்டோவ் - அடிப்படை விலை - ரூ 2 கோடி, வக்கார் சலாம்கில் - அடிப்படை விலை - ரூ 75 லட்சம், அன்மோல்ப்ரீத் சிங் - அடிப்படை விலை - ரூ 30 லட்சம், யாஷ் துல் - அடிப்படை விலை - ரூ 30 லட்சம், உட்கர்ஷ் சிங் - அடிப்படை விலை - ரூ 30 லட்சம், உபேந்திர யாதவ் அடிப்படை விலை - ரூ 30 லட்சம், லுவ்னித் சிசோடியா - அடிப்படை விலை - ரூ 30 லட்சம் ஆகியோரை எந்த அணியும் ஏலத்தில் எடுக்க முன்வரவில்லை.
ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு லாட்டரி அடித்துள்ளது. இந்திய வேகப்பந்து வீச்சாளராக இருந்தாலும் சரி, வெளிநாட்டு வேகப்பந்து வீச்சாளராக இருந்தாலும் சரி, அணிகள் வெளிப்படையாக பணம் செலவழிக்கின்றன. ஐபிஎல் 2025 ஏலத்தில் இங்கிலாந்தின் ஜோஃப்ரா ஆர்ச்சர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் ரூ.12.50 கோடிக்கு வாங்கப்பட்டார். ஆர்ச்சரின் அடிப்படை விலை ரூ.12.50 கோடி. ஆஸ்திரேலியாவின் ஜோஷ் ஹேசில்வுட்டை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 12.50 கோடிக்கு வாங்கியது.
இந்திய வேகப்பந்து வீச்சாளர்களும் ஏலத்தில் பெரும் தொகையை பெற்றனர். அவேஷ் கான் ரூ.9.75 கோடிக்கு டெல்லி கேப்பிடல்ஸ் அணியால் வாங்கப்பட்டார். அதேசமயம் பிரசித் கிருஷ்ணா ரூ.9.50 கோடி பெற்றுள்ளார். கிருஷ்ணாவை குஜராத் டைட்டன்ஸ் அணி வாங்கியது. கலீல் அகமதுவை சென்னை சூப்பர் கிங்ஸ் ரூ.4.80 கோடிக்கு வாங்கியது.
வேகப்பந்து வீச்சாளர் டி.நடராஜனுக்கும் ஏலத்தில் பெரும் தொகை கிடைத்தது. 10.75 கோடிக்கு நடராஜனை டெல்லி கேப்பிடல்ஸ் வாங்கியது. நடராஜனை ஆர்சிபியும் வாங்க முயன்றது. நடராஜனை ஆர்சிபி ரூ.10.50 கோடி வரை ஏலம் எடுத்தது. வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் போல்ட்டை 12.50 கோடிக்கு வாங்கியது மும்பை இந்தியன்ஸ்.
Readmore: ஐபிஎல் மெகா ஏலம் 2025!. அப்துல் சமத் முதல் நமன் தீர் வரை!. பல கோடிக்கு ஏலம் போன அன்கேப்ட் வீரர்கள்!