அதிர்ச்சி!. கொட்டித் தீர்க்கும் கனமழை!. காஸாவில் பேரழிவு ஏற்படும்!. சிவில் பாதுகாப்பு எச்சரிக்கை!
Gaza: காஸாவில் மழை காரணமாக மனிதாபிமான பேரழிவு ஏற்படும் என்று வெள்ளத்தால் இடம்பெயர்ந்த மக்களின் கூடாரங்கள் சேதமடையும் என்றும் குடிமை தற்காப்புப் பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து குடிமை தற்காப்பு பிரிவு விடுத்துள்ள செய்திக்குறிப்பில், மழை காரணமாக யர்மூக் ஸ்டேடியம் தங்குமிட முகாம்களில் இடம்பெயர்ந்த மக்களின் கூடாரங்கள், காஸா நகராட்சி பூங்கா, கடற்கரை முகாம் மற்றும் காஸா நகரில் உள்ள பள்ளிகளில் அமைக்கப்பட்டிருந்த கூடாரங்கள் சேதமடைந்துள்ளன. முகாமில் உள்ள இடம்பெயர்ந்த மக்களுக்கு இதே நிலை தொடர்ந்தால், அவர்கள் தங்குவதற்கு தகுதியற்ற நிலை ஏற்படும். இது மனிதாபிமான பேரழிவுக்கு வழிவகுக்கும் என்று குறிப்பிட்டுள்ளது.
குளிர்காலம் தொடங்கும்போது, இந்த நிலைமைகள் மேலும் மோசமடையக்கூடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதாவது, காஸா பகுதியில் உள்ள உட்கட்டமைப்புகளை இஸ்ரேலிய ராணுவம், அழித்ததால், கழிவு நீர் கால்வாய்கள் அடைக்கப்பட்டுள்ளதால் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் மழைநீரில் சிக்கினால் பேரழிவை சந்திக்க நேரிடும் என்று குறிப்பிட்டுள்ளது.
இதுதொடர்பாக சிவில் தற்காப்பு பிரிவின் செய்தித் தொடர்பாளர் மஹ்மூத் பாசல், இந்த கட்டமைப்புகள் தங்கள் பகுதிகளில் குண்டுவெடிப்புகளால் விரிசல் கடுமையான சேதத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், இதனால் கட்டிடங்கள் இடிந்து விழும் அபாயம் இருப்பதாகவும் எச்சரித்தார். எனவே, பாதிப்பில் உள்ளவர்கள் பாதுகாக்க கூடாரங்கள் மற்றும் கேரவன்களை வழங்கவேண்டும் என்றும் பாசல் கேட்டுக்கொண்டார்.
Readmore: கூட்டணி இல்லாமல் திமுக, அதிமுக ஆட்சி அமைக்க முடியாது…! கம்யூனிஸ்ட் தலைவர் பாலகிருஷ்ணன் கருத்து…!