2025 ஜனவரி 1-ம் தேதி முதல்... அரசு ஊழியர்கள் & ஓய்வூதியம் பெறும் நபர்களுக்கு...! தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு
அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களின் பயன்பாட்டிற்கான களஞ்சியம் கைப்பேசி செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
களஞ்சியம் கைப்பேசி செயலி 01.01. 2025 முதல் முழுமையான பயன்பாட்டிற்கு வர உள்ளது . இச்செயலி மூலம், அரசு ஊழியர்கள் தங்களின் Pay Slip, Pay Drawn Particulars முதலிய அறிக்கைகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் விடுப்புகள் ( தற்செயல் விடுப்பு. ஈட்டிய விடுப்பு முதலியவைகளும்), பண்டிகை முன்பணம் மற்றும் பொது வருங்கால வைப்பு நிதி முன்பணம் ஆகியவற்றையும் இச்செயலி மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் பண்டிகை முன்பணம் மற்றும் ஈட்டிய விடுப்பு தொடர்பான செயல்முறை ஆணைகளும் உடனடியாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பொது வருங்கால வைப்பு நிதி (CIF) மற்றும் பங்களிப்பு ஓய்வுதிய திட்டம் (CTS கான மீதத்தொகையை சரிப்பார்த்துக் கொள்ளலாம். ஒய்வூதியர்கள் தங்களின் வருடாந்திர நேர்காணலை இச்செயலி மூலம் செய்யலாம். மேலும் Pension Slip, Pension Drawn Particulars Form 16 ஆகியவற்றையும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் களஞ்சியம் கைப்பேசி யெலியை Google Play Store மூலம் பதிவிறக்கம் செய்யலாம். இச்செயலி சம்பந்தமான சந்தேகங்களை அறிய சம்பளக் கணக்கு அலுவலகம் (வடக்கு), சென்னை 01-யை தொடர்பு கொள்ளலாம். இப்பொருள் தொடர்பான சுற்றறிக்கை எற்கனவே அனைத்து துறைகளுக்கும் சுற்றறிக்கை விடுக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.