முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

தலைவலி முதல் குடல் புண் வரை..!! இந்த பாட்டி வைத்தியம் தெரிந்திருந்தால் மருந்து செலவே ஆகாது..!!

If grandmother knows the medical tips and keeps the medical expenses no more.
05:10 AM Oct 18, 2024 IST | Chella
Advertisement

பாட்டி வைத்திய குறிப்புகளை தெரிந்து வைத்துக் கொண்டால் மருத்துவ செலவு இனி இல்லை.

Advertisement

தலைவலி

துளசி சிறிதளவு, சுக்கு ஒரு துண்டு எடுத்து தண்ணீர் விட்டு அரைத்து நெற்றியில் பற்றுப்போட்டால் தலைவலி காணாமல் போய்விடும்.

செரிமான பிரச்சனை

ஒரு கொத்து கறிவேப்பிலை, ஒரு துண்டு இஞ்சி மற்றும் 1/4 தேக்கரண்டி சீரகத்தை ஒரு கிளாஸ் நீரில் போட்டு காய்ச்சி வடிகட்டி குடித்து வந்தால், செரிமான பிரச்சனை நீங்கும்.

விக்கல்

பெரு நெல்லிக்காயை அரைத்து சாறு எடுத்து தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் தொடர் விக்கல் குணமாகும்.

தேமல்

சிறிது பூண்டு மற்றும் வெற்றிலையை அரைத்து தேமல் மீது பூசி குளித்து வந்தால் விரைவில் மறையும்.

இருமல்

ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறில் சிறிது தேன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் இருமல் குணமாகும்.

மூலம்

ஒரு கிளாஸ் மோரில் சிறிது சின்ன வெங்காயம் சேர்த்து பருகி வந்தால் மூலம் சரியாகும்.

பேதி

நல்லெண்ணெயில் மொந்த வாழை பழத்தை நனைத்து சாப்பிட்டால் பேதி முழுமையாக கட்டுப்படும்.

பித்தம்

மருதாணி இலையை அரைத்து கை, கால்களில் பூசி வந்தால் பித்தம் குணமாகும்.

வயிறு வலி

வெந்தயத்தை வறுத்து நீரில் காய்ச்சி குடித்து வந்தால் வயிறு வலிக்கு தீர்வு கிடைக்கும்.

குடல் புண்

மஞ்சள் தூளை ஒரு கிளாஸ் நீரில் போட்டு காய்ச்சி குடித்து வந்தால் குடல் புண் முழுமையாக குணமாகும்.

Read More : தண்ணீர் பற்றாக்குறையால் உணவு உற்பத்தி பாதியாக குறையும் அபாயம்..!! வெளியான பரபரப்பு ஆய்வறிக்கை..!!

Tags :
இயற்கை வைத்தியம்பாட்டி வைத்தியம்மருத்துவ செலவு
Advertisement
Next Article