முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

"திமுக-விலிருந்து மோடி குடும்பம் வரை"… நடிகர் SARATH KUMAR-ன் அரசியல் பாதை.!

08:53 PM Mar 12, 2024 IST | Mohisha
Advertisement

நடிகர் SARATH KUMAR-ன் அரசியல் பாதை திமுகவில் தொடங்கியது. தற்போது அவர் தனது சமத்துவ மக்கள் கட்சியை பாஜகவுடன்(BJP) இணைத்திருக்கிறார். அரசியலில் சரத்குமார் கடந்து வந்த பாதையை இந்த பதிவில் காணலாம்.

Advertisement

தமிழ் சினிமா நடிகர் சரத்குமார்(SARATH KUMAR) தன்னுடைய சமத்துவ மக்கள் கட்சியை பாரதிய ஜனதா கட்சியுடன் இணைத்ததாக இன்று அறிவித்திருக்கிறார். நேற்று பாரதிய ஜனதா கட்சியுடன்(BJP) கூட்டணியில் இணைந்த சரத்குமார் இன்று தன்னுடைய சமத்துவ மக்கள் கட்சியை பாரதிய ஜனதா கட்சியுடன் இணைத்து இருக்கிறார்.

தமிழ் சினிமாவின் சுப்ரீம் ஸ்டார் என அழைக்கப்படும் சரத்குமார் தனது நடிப்பு வாழ்க்கையில் உச்ச கட்டத்தில் இருந்த நேரத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்து அரசியலில் பணியாற்றி வந்தார். இதனைத் தொடர்ந்து 1998 ஆம் வருடம் நடைபெற்ற தேர்தலில் திமுக சார்பாக திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட்ட சரத்குமார் தோல்வியடைந்தார். எனினும் 2001 ஆம் ஆண்டு சரத்குமாருக்கு மாநிலங்களவை எம்பி பதவி கொடுத்து அழகு பார்த்தார்
கலைஞர் கருணாநிதி.

இதன் பிறகு கலைஞர் கருணாநிதிக்கு நெருக்கமானவர்களால் அவமானப்பட்டதாக பொங்கி எழுந்த அவர் தனது மனைவியுடன் அதிமுகவில் இணைந்தார். எனினும் வேலை பளு மற்றும் நடிகர் சங்கப் பதவி போன்றவற்றால் அதிமுகவில் சேர்ந்த ஒரு சில மாதங்களிலேயே விலகினார். இதனைத் தொடர்ந்து 2007 ஆம் ஆண்டு சமத்துவ மக்கள் கட்சியை தோற்றுவித்த அவர் அந்தக் கட்சியின் பொதுச் செயலாளராக தன்னை அறிவித்துக் கொண்டார். 2011 ஆம் வருட சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இணைந்து தேர்தலை எதிர்கொண்டார். இந்தத் தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சிக்கு இரண்டு தொகுதிகளில் போட்டியிட வாய்ப்பு கிடைத்தது நாங்குநேரி மற்றும் தென்காசி தொகுதியில் சமத்துவ மக்கள் கட்சி போட்டியிட்டது

இதில் தென்காசி தொகுதியில் போட்டியிட்ட சரத்குமார் எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் பிறகு 2016 ஆம் வருடம் நடைபெற்ற தேர்தலிலும் அதிமுக கூட்டணியில் திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிட்ட அவர் தோல்வியை தழுவினார். 2021 ஆம் வருட சட்டமன்ற தேர்தலில் கமல்ஹாசனின் கட்சியுடன் இணைந்து போட்டியிட்ட அவர் 40 தொகுதிகளிலும் தோல்வியை தழுவினார். தற்போது பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அந்தக் கட்சியோடு தனது கட்சியை இணைத்து அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார் சரத்குமார். மேலும் தனது 'X' வலைதள பக்கத்தில் மோடியின்(MODI) குடும்பம் என்று தன்னை அடையாளப்படுத்தி இருக்கிறார் அவர்.

Read More: வீடியோ: விபத்திற்கு சில நிமிடங்களுக்கு முன் ‘TEJAS’ போர் விமானத்தின் பைலட் பாதுகாப்பாக வெளியேறும் காட்சி.!

Tags :
@ADMK#DMKannmalaiJeyalalithakarunanidhisarath kumar
Advertisement
Next Article