Audi முதல் Volvo வரை..!! விஜயகாந்தின் கார் கலெக்ஷன்ஸ்..!! இவ்வளவு பிரம்மாண்டமா..?
ஒரு மாபெரும் சகாப்தம் இன்று நம்மை விட்டு பிரிந்திருக்கிறது. கேப்டன் விஜயகாந்த் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவரது உடல் தேமுதிக தலைமை அலுவலகத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. நாளை மாலை அவரது உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படுகிறது.
இந்நிலையில், அவர் இந்த தமிழ் மண்ணில் சும்மா வாழ்ந்துவிட்டு போகவில்லை, ஓர் ராஜா கணக்கா வாழ்ந்துவிட்டே சென்றிருக்கின்றார் என்கிற தகவல் நம்முடைய மனசை லேசாக இலகாக்கும் வகையில் அமைந்திருக்கிறது. இதற்கு சான்றாக அவர் பயன்படுத்தி வந்த கார் மாடல்கள் இருக்கின்றன. நம்முடைய கேப்டன் விஜயகாந்த் அரண்மனைப் போன்ற அனுபவத்தை வழங்கக் கூடிய பல வகையான கார்களை பயன்படுத்தி வந்திருக்கிறார். அவற்றின் விவரங்களை தற்போது பார்க்கலாம்.
ஆடி க்யூ (Audi q7) : இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் மிகவும் சொகுசான மற்றும் பிரீமியம் அம்சங்கள் நிறைந்த சொகுசு கார் மாடல்களில் ஆடி க்யூ7-ம் ஒன்றாகும். இந்த காருக்கு இந்திய தொழிலதிபர்கள், கோடீஸ்வரர்கள் மற்றும் திரை நட்சத்திரங்கள் மத்தியில் இந்த காருக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதன் சந்தை மதிப்பு ரூ. 84.70 லட்சம் ஆகும். இந்த கார் அதிக சொகுசு வசதியைத் தாங்கியது மட்டுமின்றி, இதன் லேட்டஸ்ட் வெர்ஷன் பாதுகாப்பிற்காக ஐஐஎச்எஸ் உயரிய விருதையும் வென்றிருக்கின்றது. இத்தகைய ஓர் வாகனத்தையே கேப்டன் தன்னுடைய பயணங்களை கடந்த காலங்களில் மேற்கொண்டார்.
மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்350 சிடிஐ (Mercedes Benz S350 CDI) : கேப்டன் பயன்படுத்தி வந்த அதிக சொகுசு வசதிகள் நிறைந்த சொகுசு கார் மாடல்களில் இதுவும் அடங்கும். எக்ஸ்-ஷோரூமில் இதன் விலை ரூ. 1.6 கோடியை நெருங்கும். இத்தகைய மாபெரும் விலைக் கொண்ட காரிலேயே கடந்த காலங்களில் வலம் வந்திருக்கின்றார் கேப்டன் விஜயகாந்த்.
பிஎம்டபிள்யூ எக்ஸ்5 (BMW X5) : விஜயகாந்திற்கு சண்முக பாண்டியன் மற்றும் விஜய் பிரபாகர் அழகர்சாமி என இருமகன்கள் உள்ளனர். இவர்கள் இருவரால் கேப்டனுக்கு பரிசாக வழங்கப்பட்ட கார் மாடலே இந்த அதிக ஆடம்பர அம்சங்களைத் தாங்கிய எக்ஸ்5 கார் மாடல் ஆகும். இதன் சந்தை மதிப்பு ரூ. 90 லட்சத்திற்கும் அதிகம் ஆகும். இதன் உயர்நிலை தேர்வு ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமான விலையில் விற்கப்படுகிறது.
ஃபோர்டு என்டீயோவர் (Ford Endeavour) : பிஎம்டபிள்யூ எக்ஸ்5 சொகுசு காரைபோல பிள்ளைகளால் பரிசளிக்கப்பட்ட மற்றுமொரு ஆடம்பர கார் மாடலாக இது இருக்கிறது. இந்த கார் இப்போது இந்தியாவில் விற்பனையில் இல்லை. அதேவேளையில், ஒரு சிலர் இந்தியாவில் இந்த காரை பயன்படுத்தி வருகின்றனர். அவர்களில் ஒருவராகவே நம்முடைய கேப்டன் இருந்தார்.
வால்வோ எஸ்90 (Volvo S90) : கேப்டன் விஜயகாந்த் பயன்படுத்திய சூப்பரான செடான் ரக கார் மாடலாக இருக்கிறது. இதில் பிரீமியம் அம்சங்களும், சொகுசு வசதிகளும் மிக மிக தாராளமாக வழங்கப்பட்டு இருக்கிறது. இதனால்தான் ஆடம்பர கார்களை தேடுவோர் மத்தியில் இந்த காருக்கு என தனி இடம் இருக்கிறது. இந்த காரின் இந்திய மதிப்பு ரூ. 68 லட்சத்திற்கும் அதிகம் ஆகும்.
இந்த கார் மாடல்களை மட்டுமின்றி, கேப்டன் தன்னுடைய சமீபதத்திய பயணங்களுக்கு டொயோட்டா இன்னோவா க்ரிஸ்டா (Toyota Innova Crysta MPV)-வை அதிகளவில் பயன்படுத்தி இருக்கிறார். குறிப்பாக, உடல்நிலை குன்றிய பின்னர் அவர் அதிக அளவில் இந்த கார் மாடலையே பயன்படுத்தியுள்ளார். பொது நிகழ்ச்சியில் கலந்துக் கொள்வது தொடங்கி பலவற்றிற்கு இந்த காரையே அவர் பயன்படுத்தி வந்துள்ளார்.
இதுதவிர, ஹூண்டாய் சேன்டா எஃப்இ (Hyundai Santa FE) கார் மாடலையும் கேப்டன் பயன்படுத்தி வந்துள்ளார். இந்தியாவில் விற்பனையில் இல்லாத கார் மாடல்களில் இதுவும் ஒன்றாகும். இத்தகைய தனித்துவமான கார் மாடலையே அவர் தமிழ்நாட்டில் பயன்படுத்தி வந்துள்ளார்.