அஸ்வின் முதல் ஜேம்ஸ் ஆண்டர்சன் வரை!. 2024-ல் கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்ற நட்சத்திர வீரர்கள்!
Star players: 2024 ஆம் ஆண்டில், கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்ற மிகச்சிறந்த நட்சத்திர வீரர்கள் குறித்து பார்க்கலாம்.
2024/25 பார்டர்-காஸ்வாஸ்கர் டிராபியில், இந்தியாவுக்காக அதிக விக்கெட்டுகளை (343) வீழ்த்திய இந்திய ஜாம்பவான் ரவிசந்திரன் அஸ்வின், சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து விடைபெற்றார். இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டரான சென்னையை சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் விளையாடிய பிரிஸ்பன் டெஸ்ட் போட்டி சமனில் முடிந்த நிலையில் அவர் ஓய்வை அறிவித்துள்ளார்.
இந்தியாவின் அபார சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவரான அஸ்வின், டெஸ்ட் கிரிக்கெட்டில் 537 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இந்தியாவில் கும்ப்ளேவுக்கு அடுத்ததாக அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய சுழற்பந்து வீச்சாளராக அஸ்வின் அறியப்படுகிறார்.
கடந்த 2010 முதல் இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் அஸ்வின் விளையாடி வந்தார். 38 வயதான அவர், 105 டெஸ்ட், 116 ஒருநாள் மற்றும் 63 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார். 2011-ல் ஒருநாள் உலகக் கோப்பை வென்ற இந்திய அணியில் இடம் பிடித்தவர். அனைத்து பார்மெட் கிரிக்கெட்டிலும் மொத்தமாக 4,394 ரன்கள் மற்றும் 765 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
“டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளேன். இது ஆழ்ந்த யோசனைக்கு பிறகு எடுத்த முடிவு. இந்தியாவுக்காக நான் விளையாடியது மறக்க முடியாத உன்னத பயணம். அணி வீரர்கள், பயிற்சியாளர்கள், பிசிசிஐ மற்றும் ரசிகர்கள் என அனைவருக்கும் இந்நேரத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு என் நெஞ்சில் எப்போதுமே ஸ்பெஷலானதாக இருக்கும்” என அஸ்வின் தெரிவித்துள்ளார்.
ஜேம்ஸ் ஆண்டர்சன்: இ ங்கிலாந்து அணியின் சீனியர் வேகப்பந்து வீச்சாளரான ஜேம்ஸ் ஆண்டர்சன், கடந்த ஜூலை மாதம் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். 42 வயதான ஆண்டர்சன் 2003-ம் ஆண்டு லார்ட்ஸில் நடைபெற்ற ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். 187 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ள ஆண்டர்சன் 700 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 700 விக்கெட்களை கைப்பற்றியுள்ள முதல் வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனை ஆண்டர்சன் வசமே உள்ளது. ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 194 ஆட்டங்களில் விளையாடி 269 விக்கெட்கள் கைப்பற்றியுள்ளார். அதே வேளையில் சர்வதேச டி 20-ல் 19 ஆட்டங்களில் பங்கேற்று 18 விக்கெட்கள் வீழ்த்தியுள்ளார்.
நியுசிலாந்து அணிக்காக கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருபவர் டிம் சவுத்தி. இதுவரை அவர் 104 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 384 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். நியுசிலாந்து அணிக்கு சில போட்டிகளில் கேப்டனாகவும் செயல்பட்டுள்ளார். இந்நிலையில் அவர் தற்போது டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக கடந்த டிசம்பர் 17ம் தேதி அறிவித்துள்ளார்.
இங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் வெற்றியோடு விடைபெற்றார். இந்த போட்டியில் அவர் 2 விக்கெட்கள் வீழ்த்தினார். பேட்டிங்கில் அதிரடியாக விளையாடி 10 பந்துகளில் 23 ரன்கள் விளாசினார். நியுசிலாந்து அணிக்காக 107 டெஸ்ட் போட்டிகள் விளையாடியுள்ள அவர் 307 விக்கெட்கள் வீழ்த்தியுள்ளார்.
இதேபோல், நடப்பாண்டில் டேவிட் வார்னர், டீன் எல்கர், வருண் ஆரோன், சவுரப் திவாரி, காலின் முன்ரோ , நீல் வாக்னர் , கேதர் ஜாதவ், தினேஷ் கார்த்திக், டேவிட் வைஸ், ஷிகர் தவான், டேவிட் மலான், வில் புகோவ்ஸ்கி, மொயின் அலி , பரிந்தர் ஸ்ரான், மாத்யூ வேட்,சித்தார்த் கவுல், இமாத் வாசிம், முகமது அமீர் ஆகியோரும் கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்றனர்.
Readmore: மார்கழி மாத முதல் சனிக்கிழமை!. கடன் பிரச்சனை தீர இந்த 3 பொருட்களை வைத்து பெருமாளை வழிபடுங்கள்!.