மீண்டும் ஒரு தொற்றுநோய் வெடிப்பு முதல் இயற்கை பேரழிவுகள் வரை!. 2025ல் இதெல்லாம் நிகழும்!. நாஸ்ட்ரடாமஸ் கணிப்பு!.
Nostradamus: பிரேசில் நாட்டவரான 37 வயது Athos Salomé இதுவரை கணித்து வெளியிட்டுள்ள கணிப்புகள் துல்லியமாக நிறைவேறியுள்ளது. வாழும் நாஸ்ட்ராடாமஸ் என பரவலாக அறியப்படும் இவர், கொரோனா பெருந்தொற்று, பிரித்தானிய ராணியாரின் மரணம், உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஊடுருவல் என கணித்தவை அனைத்தும் நிறைவேறியுள்ளது. இந்நிலையில், 2025ம் ஆண்டில் நிகழும் சம்பவங்கள் குறித்து நாஸ்ட்ராடாமஸ் கணிப்பு வெளியாகியுள்ளன.
இன்னும் சில நாட்களில் 2024ம் ஆண்டு முடிவுக்கு வரவுள்ளது. இந்தநிலையில், அடுத்த ஆண்டு என்னென்ன நடக்க கூடும் என ஜோதிடர்கள் முன்கூட்டியே கணிக்க தொடங்கி விட்டனர். அந்த வகையில் 2025 ஆம் ஆண்டு ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையிலான போர் முடிவுக்கு வர வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டு தொடங்கிய இந்த போர் இரு தரப்புக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. நீண்ட நாட்களாக நடத்தப்பட்டு வரும் போரால் பொருளாதாரமும், உயிர்ச்சேதமும் அதிக எண்ணிக்கையில் நடந்துள்ளன. இந்த போர் இரு நாடுகளை மட்டுமின்றி அந்த நாடுகளிடம் வர்த்தகம் செய்யும் இந்தியாவில் உள்பட பல நாடுகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதே போன்று அடுத்த ஆண்டு பிளேக் புற்று நோய் ஏற்பட வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. மேலும் விண்கற்கள் பூமி மீது மோதுவதற்கு வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதேபோன்று தென் அமெரிக்கா நாடான பிரேசிலில் இயற்கை பேரழிவுகள் ஏற்படலாம் என்று புத்தகத்தின் அடிப்படையில் ஜோதிடர்கள் கணித்துள்ளார்கள். எரிமலை வெடிப்பு, வெள்ளம் போன்றவற்றால் பேரழிவு ஏற்படும் என்று கூறப்படுகிறது.
Readmore: 2024ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட விஷியங்கள்!. முதல் 10 இடங்களை பிடித்தது என்ன தெரியுமா?