ஆதார் முதல் வருமான வரி வரை!. இன்றுமுதல் இந்த ரூல்ஸ்லாம் மாறிடுச்சு!. முழுவிவரம் இதோ!
Major Changes: செப்டம்பர் மாதம் நேற்றுடன் முடிந்தநிலையில் இன்றுமுதல் குறிப்பிடத்தகுந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஆதார், வருமான வரி விதிகளில் மாற்றம், சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் மாற்றம் முதல் செல்வமகள் சேமிப்பு கணக்கில் மாற்றங்கள் உள்ளிட்டவை கொண்டு வரப்படவுள்ளன.
நீங்கள் எச்டிஎஃப்சி கிரெடிட் கார்டு வைத்திருந்தீர்கள் என்றால் சில கிரெடிட் கார்டுகள் அவற்றின் லாயல்டி திட்டங்களில் மாற்றங்கள் செய்யப்படவுள்ளன. அது போல் மத்திய அரசின் செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் (சுகன்யா சம்ரித்தி திட்டம்) மாற்றம் வருகிறது. இந்த புதிய விதிகளின் கீழ் சிறுமிகளின் சட்டப்பூர்வ பாதுகாவலர்கள் மட்டுமே முதல் நாள் முதல் இந்தக் கணக்குகளை இயக்கி வர வேண்டும்.
புதிய விதிமுறைகளின்படி, ஒரு பெண்ணின் எஸ்எஸ்ஒய் கணக்கை அவரது சட்டப்பூர்வ பாதுகாவலரை தவிர யேறு யாரேனும் திறந்திருந்தால் அந்த கணக்கை சட்டப்பூர்வ பாதுகாவலருக்கு மாற்ற வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால் கணக்குகள் முடக்கப்படும். அது போல் பிபிஎஃப் எனப்படும் தபால் அலுவலக சிறு சேமிப்புத் திட்டத்தில் 3 முக்கிய மாற்றங்கள் வருகின்றன. பல கணக்குகளை வைத்திருப்பவர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் எடுக்கப்படும். கணக்கு வைத்திருப்பவருக்கு 18 வயது நிறைவடையும் வரை தபால் அலுவலக சேமிப்பு கணக்கில் வட்டி கிடைக்காது.
அது போல் இன்றுமுதல் 4 ஜி, 5 ஜி நெட்வொர்க்குகளின் தரத்தை மேம்படுத்த டிராய் சில மாற்றங்களை செய்யவுள்ளது. ஜியோ, ஏர்டெல், பிஎஸ்என்எல் மற்றும் பிற தொலைத் தொடர்பு நிறுவனங்கள் இந்த புதிய விதிகளை பின்பற்ற வேண்டும். இந்த விதிகளை மீறுபவர்களுக்கு அபராதமும் விதிக்கப்படும். பங்குச் சந்தை போனஸ் கடன் தொடர்பான விதிகளை செபி அறிவித்துள்ளது. இந்த புதிய விதிகள் இன்று முதல் அமலுக்கு வருகின்றன.
செபி, பங்கு வரவுக்கான நேரத்தை 2 நாட்களாக குறைத்துள்ளது. அது போல் போனஸ் பங்குகள் பதிவு செய்யப்பட்ட தேதியிலிருந்து இரு நாட்களுக்குள் வழங்கப்படும். வரும் அக்டோபர் மாதத்தில் வங்கிகளுக்கு மொத்தம் 15 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை நாட்கள் உங்கள் வங்கிப் பணிகளை பாதிக்கும்.
இன்றுமுதல் வருமான வரி தொடர்பாக பல விதிகள் மாற்றப்பட உள்ளன. இந்த மாற்றங்கள் மத்திய பட்ஜெட் 2024 தாக்கல் செய்யப்பட்டபோது அறிவிக்கப்பட்ட மாற்றங்கள் ஆகும். இந்த மாற்றத்தின் நோக்கம் வரி செயல்முறையை சீரமைத்து சில பகுதிகளில் நிவாரணம் வழங்குவதாகும்.
(அக்டோபர் 1) இன்றுமுதல், ஃபுளோட்டிங் ரேட் பாண்டுகள் உட்பட குறிப்பிட்ட மத்திய மற்றும் மாநிலப் பத்திரங்களிலிருந்து பெறப்படும் வட்டிக்கு 10 சதவீத வரி (டிடிஎஸ்) விதிக்கப்படும். இந்த மாற்றம் 2024 பட்ஜெட்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. இது அரசாங்கப் பத்திரங்களை TDSக்கு உட்பட்ட பிற நிதிக் கருவிகளுக்கு ஏற்ப கொண்டு வரப்பட்டது. புளோட்டிங் ரேட் சேமிப்பு பத்திரங்கள் உட்பட மற்ற பத்திரங்கள் இப்போது இந்த புதிய டிடிஎஸ் விதியின் கீழ் வரும். இந்த பத்திரங்களில் உள்ள முதலீட்டாளர்கள் வட்டி செலுத்துதலில் இருந்து TDS விலக்கு பெறுவார்கள். இது அத்தகைய பத்திரங்களின் மீதான வரிக்கு பிந்தைய வருமானத்தில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.
பான் கார்டுக்கு விண்ணப்பிக்கவோ அல்லது வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யவோ இனி ஆதார் பதிவு ஐடியைப் பயன்படுத்த அனுமதிக்கப்படாது. இந்த புதிய விதி இன்றுமுதல் அமலுக்கு வருகிறது. பான் எண்ணைத் தவறாகப் பயன்படுத்துவதையும் நகல் எடுப்பதையும் தடுக்க அரசாங்கம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
அக்டோபர் 1 முதல், பெண் குழந்தைகளுக்கான திட்டமான சுகன்யா சம்ரித்தி யோஜனா எனப்படும் செல்வமகள் சேமிப்புத் திட்டத்தின் விதிகளும் மாறும். புதிய விதியின்படி, பேத்திகளுக்கான சுகன்யா சம்ரித்தி கணக்கை தாத்தா பாட்டி திறந்திருந்தால், அந்தக் கணக்கு பாதுகாவலர் அல்லது பெற்றோருக்கு மாற்றப்படும். இரண்டு கணக்குகளுக்கு மேல் திறக்கப்பட்டிருந்தால், கூடுதல் கணக்கு மூடப்படும்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலை 2024 -க்கான அகவிலைப்படி உயர்வு அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்ப்டுகின்றது. டிஏ உயர்வுக்கு (DA Hike) பிறகு ஊழியர்களின் அகவிலைப்படி மற்றும் ஓய்வூதுயதாரர்களின் அலவிலை நிவாரணம் 53%-54% ஆக அதிகரிக்கும்.
முதல், தேசிய சிறுசேமிப்பு (என்எஸ்எஸ்) திட்டங்களின் (Post Office Small Saving Schemes) கீழ் உள்ள தபால் அலுவலக சிறு சேமிப்புக் கணக்குகளில் பெரிய மாற்றங்கள் ஏற்படும். ஒவ்வொரு காலாண்டிலும் இந்த திட்டங்களின் வட்டி விகிதங்களில் திருத்தங்கள் செய்யப்படுகின்றன. அந்த வகையில் இந்த நிதியாண்டின் மூன்றாம் காலாண்டின் தொடக்கமான அக்டோபர் 1 ஆம் தேதி வட்டி விகிதங்கள் அதிகரிக்கப்படும் என நம்பப்படுகின்றது.
Readmore: தள்ளாத வயதில் தவிக்க விடாதீர்கள்!. இன்று சர்வதேச முதியோர் தினம்!.