2025ல் சக்திவாய்ந்த நிலநடுக்கம் முதல் உக்ரைன் வெற்றிவரை!. பாபா வங்காவின் அச்சமூட்டும் கணிப்புகள்!.
Baba Vanga: எங்கும் எதிர்பாராத மழை அதிகரித்துள்ளது. அத்துடன் புயலும் வீசுகிறது. இதற்கிடையில் பாபா வங்காவின் கணிப்பு நினைவுக்கு வருகிறது. பாபா வாங்காவின் கணிப்பு என்ன?. 2025ல் என்ன நடக்கப்போகிறது?. பாபா வங்கா கூறிய அதிர்ச்சி கணிப்பு என்ன என்பதை இங்கே தெரிந்து கொள்வோம். உலகில் பல தீர்க்கதரிசிகள் உள்ளனர். அவர்களில் பாபா வங்காவும் ஒருவர். ஆனால் அவரது கணிப்புகள் மிகவும் பிரபலமானவை. ஏனென்றால், ஆண்டுதோறும் உலகில் நடக்கும் நிகழ்வுகளை பாபா வங்கா முன்னரே கணித்துள்ளார். இதுவரை அவருடைய பல கணிப்புகள் நிறைவேறியுள்ளன.
பல்கேரியாவை சேர்ந்த பாபா வங்கா, 12 வயதில் பார்வையை இழந்தார். ஆனால் பார்வை பறிபோன பிறகு, அவருக்கு எதிர்காலத்தை கணிக்கும் சக்தி கிடைத்ததாக கூறப்படுகிறது. அவர் இறப்பதற்கு முன்பு, ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் நிகழ்வுகளை கணித்து, அவற்றை குறிப்புகளில் எழுதினார். இதுவரை அவருடைய பல கணிப்புகள் நிறைவேறியுள்ளன.
எனவே, ஒவ்வொரு வருடமும் பிறப்பதற்கு முன்பு அந்த ஆண்டில் என்ன மாதிரியான நல்லது, கெட்டது நடக்கும் என்பது பற்றி பாபா வங்காவின் கணிப்புகளை அறிய பலர் ஆர்வமாக உள்ளனர். இன்னும் சில மணிநேரங்களில் 2025ஆம் ஆண்டு பிறக்கப்போகிறது. இந்நிலையில், வரும் 2025ஆம் ஆண்டுக்கான பாபா வங்காவின் கணிப்புகள் என்னவென்று பார்ப்போம். செயற்கை நுண்ணறிவு உதவியுடன் சொல்லப்பட்ட பாபா வங்காவின் கணிப்புகள் என்னவென்று பார்க்கலாம்.
2025ம் ஆண்டு அமெரிக்காவிற்கும் அதிபர் டொனால் டிரம்பிற்கும் நல்லதாக இருக்காது என்று செயற்கை நுண்ணறிவு மூலம் கணிப்புகள் சொல்லப்பட்டுள்ளது. தி சன் நாளிதழின் அறிக்கையின்படி, 78 வயதான டிரம்ப் உடல்நலப் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். கூடுதலாக எலோன் மஸ்கின் உதவியுடன் தனது உலகளாவிய பின் தொடர்பவர்களுக்காக ஒரு ஊடக சாம்ராஜியத்தை உருவாக்க முயற்சிப்பார்.
அமெரிக்காவின் பசுபிக் வடமேற்கில் பாரிய நிலநடுக்கம் ஏற்படும் என்று கணித்துள்ளார். மேலும் இந்த ஆண்டு ரஷ்ய அதிபர் புதினுக்கும் நன்றாக இருக்காது என்று கணிக்கப்பட்டுள்ளது. புதின் கிரெம்ளினில் மறைந்திருப்பார். இது அவரது அடையாளத்தை பற்றிய வதந்திகளை தூண்டும். மேலும் உக்ரைன் - ரஷ்யா இடையேயான போரில் உக்ரைன் பெரும் தாக்குதலை நடத்தி வெற்றியை அறிவிக்கும். மேலும் ஐக்கிய இராச்சியத்திற்கு மோசமான எதிர்காலம் உருவாகும். அதன் கொள்கைகள் விமர்சிக்கப்படும்.அரசு குடும்பத்திலும் பிரச்சனைகள் தொடரும் என்று பாபா வங்காவின் ஏஐ கணிப்புகள் தெரிவிக்கிறது.