For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

ட்ரெண்டாகும் 'Friendship Marriage' : காதல் காமத்துக்கு 'NO' இது புதுசா இருக்கே!!

04:26 PM May 30, 2024 IST | Mari Thangam
ட்ரெண்டாகும்  friendship marriage    காதல் காமத்துக்கு  no  இது புதுசா இருக்கே
Advertisement

இதுவரை எத்தனையோ திருமணத்தைப் பார்த்திருப்போம். காதல் திருமணம், பெற்றோர்கள் பார்த்து வைக்கும் திருமணம், திருமணமே இல்லாமல் லிவிங்கில் வாழ்வது போன்றவை நமக்குத் தெரிந்த விஷயம்தான். ஆனால், அது என்ன நட்பு திருமணம்? தற்போது ஜப்பானில் மிகவும் பிரபலமாகிவரும் திருமண உறவுதான் நட்பு திருமணம். அப்படியென்றால் என்ன என்பதைப் பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்..

Advertisement

நட்பு திருமணத்தில், ஆண் பெண் இருவரும் பாரம்பரிய முறையில் திருமணம் செய்துகொண்டு சட்டப்பூர்வ கணவன் மனைவியாக வாழ்கின்றனர். ஆனால் இதில் எந்தவிதமான உறவுக்கும் இடமில்லை. அதாவது, உலக பார்வைக்கு அவர்கள் கணவன் மனைவியாக இருந்தாலும், அவர்களுக்குள் காதல் மற்றும் செக்ஸ் இருப்பதில்லை. அதுமட்டுமின்றி, இந்த திருமணத்தில் இருவரும் சேர்ந்து வாழ்வதா அல்லது பிரிந்து வாழ்வதா என்பது அவரவர் விருப்பமாகும். மேலும், அவர்கள் ஒரு குழந்தையை பெற்றுக்கொள்ள நினைத்தால், அவர்கள் அதை செயற்கையாக பெறலாம்.

அதுமட்டுமல்லாமல், இருவரும் திருமணம் செய்து கொண்டாலும், ஒருவர் அவருக்கு பிடித்த நபருடன்  உறவில் இருக்கலாம். அதை இன்னொருவர் தடுக்க அனுமதி இல்லை அல்லது இருவரும் பரஸ்பர சம்மதத்துடன் வேறொருவருடன் உறவில் இருக்கலாம். ஒருவகையில் இந்த நட்பு திருமணம் என்பது அறை தோழர்கள் போன்றதாகும். தற்போது, இந்தப் போக்கு ஜப்பானில் மிகவும் பிரபலமாகிவிட்டது. அதன் 124 மில்லியன் மக்கள் தொகையில் ஒரு சதவிகிதம் பேர் இந்த நட்பு திருமணத்தை தேர்ந்தெடுக்கின்றனர்.

இந்த நட்பு திருமணத்தில் ஆர்வம் காட்டுபவர்கள் 32 வயதிற்கு மேற்பட்டவர்கள். ஜப்பானில் மார்ச் 2015 முதல் தற்போது வரை சுமார் 500 பேர் இந்த வகையான திருமணத்தை செய்துகொண்டுள்ளனர். மேலும், அவர்கள் வீடுகளையும் கட்டியுள்ளனர் மற்றும் சிலர் குழந்தைகளை கூட தத்தெடுத்து வளர்க்கின்றனர் என்று தெரிவித்துள்ளது. ஜப்பான் மட்டுமில்லாமல் சீனா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும் இப்போது இந்தக் கான்செப்ட் சற்றே எட்டிப்பார்க்கத் தொடங்கியுள்ளது.

Read more ; ‘இந்தியாவில் இன்றும் ராஜவாழ்க்கை வாழும் அரச குடும்பங்கள்..!!’ எங்க இருக்காங்க தெரியுமா?

Tags :
Advertisement