ஆயுஷ்மான் பாரத் யோஜனா திட்டத்தில் ரூ.5 லட்சம் வரை இலவச சிகிச்சை!. தகுதி, விண்ணப்பிக்கும் முறை!. முழு விபரம் இதோ!
Ayushman Bharat Yojana: மத்திய அரசாங்கத்தால் வழங்கப்படும் ஆயுஷ்மான் பாரத் யோஜனா (Ayushman Bharat Scheme) திட்டத்தின் கீழ் பயனாளிக்கு ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரையிலான இலவச மருத்துவ சிகிச்சைகள் கிடைக்கிறது. இந்த நன்மையைப் பெற தனி நபர்கள் ஆயுஷ்மான் பாரத் கார்டை வைத்திருக்க வேண்டும். இந்த கார்டு இருந்தால், ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ள தனியார் மற்றும் அரசாங்க மருத்துவமனைகளில் சிகிச்சை பெறலாம்.
ஆயுஷ்மான் கார்டுக்கு விண்ணப்பிப்பதற்கு முன், நீங்கள் இத்திட்டத்திற்கு தகுதியானவரா என்பதைச் சரிபார்க்க வேண்டும். தகுதிப் பட்டியலின் கீழ் வருபவர்கள் மட்டுமே இத்திட்டத்தின் (Health Insurance) பலன்களைப் பெற முடியும் இதனை ஆஃப் லைன், ஆன்லைன் என இரு முறைகளிலும் கண்டறியலாம். ஆயுஷ்மான் கார்டு பெற தகுதியை ஆன்லைனில் சரிபார்க்கும் முறை: முதலில் https://pmjay.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ PMJAY இணையதளத்த்திற்குச் செல்ல வேண்டும். ஹோம் பேஜில், 'Am I Eligible' என்ற விருப்பத்தைத் தேர்ந்தெடுத்து, தகுதியைச் சரிபார்க்க வழிமுறைகளைப் பின்பற்றவும். "14555" என்ற கட்டணமில்லா எண்ணை அழைப்பதன் மூலம் தனிநபர்கள் தங்கள் தகுதியைச் சரிபார்க்கலாம்.
CSC மையத்திற்குச் சென்று தகுதியை சரிபார்க்கும் முறை: ஆயுஷ்மான் கார்டைப் பெற விரும்பினால், முதலில் நீங்கள் அருகிலுள்ள CSC மையத்திற்குச் செல்ல வேண்டும். இங்கு சென்று சம்பந்தப்பட்ட அதிகாரியை சந்திக்க வேண்டும். அரசு அதிகாரி உங்கள் தகுதியை சரிபார்பார்.உங்கள் ஆவணங்கள் சரிபார்க்கப்படும். ஆவணங்களின் மூலம் நீங்கள் தகுதியானவர் என்பதைக் கண்டறிந்தால், விண்ணப்பம் ஏற்கப்பட்டு. சிறிது நேரத்தில் உங்கள் ஆயுஷ்மான் கார்டு உருவாக்கப்படும்.இதற்குப் பிறகு உங்கள் ஆயுஷ்மான் கார்டைப் பதிவிறக்கம் செய்து அதன் மூலம் இலவச சிகிச்சையைப் பெறலாம்.
ஆயுஷ்மான் இலவச சிகிச்சை கிடைக்கும் மருத்துவமனைகள் விபரம்: உங்களிடன் ஆயுஷ்மான் கார்டு தயாரித்திருந்தால், இந்தத் திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட மருத்துவமனைகளில் மட்டுமே நீங்கள் இலவச சிகிச்சையைப் பெற முடியும். இதில் பல தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளும் அடங்கும். மருத்துவமனையில் உள்ள ஹெல்ப் டெஸ்கில் இலவச சிகிச்சை குறித்த விபரங்களைப் பெறலாம்.
உங்கள் நகரத்தில் ஆயுஷ்மான் திட்டம் செயல்படுத்தப்படும் மருத்துவமனையை கண்டுபிடிக்கும் முறை: ஆயுஷ்மான் திட்டத்துடன் தொடர்புடைய எந்த அரசு அல்லது தனியார் மருத்துவமனையிலும் உங்களுக்கான இலவச சிகிச்சையை பெற்றுக் கொள்ளலாம். இது குறித்த தகவல்களை அறிய கீழ்கண்ட வழிமுறையை பின்பற்றவும். ஆயுஷ்மான் பாரத் இணையதளமான pmjay.gov.in என்ற வலைத்தளத்திற்கு செல்லவும். 'Find Hospital' என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும். இதில் உங்கள் மாநிலம், மாவட்டம் மற்றும் மருத்துவமனை (அரசு அல்லது தனியார் மருத்துவமனை) வகையைத் தேர்ந்தெடுக்கவும் . உங்களுக்கு எந்த விதமான நோய்க்கு சிகிச்சை தேவை என்பதை நீங்கள் தேர்வு செய்யவும்.
இதனை அடுத்து, Empanelment Type என்னும் ஆப்ஷனில் PMJAYஐத் தேர்ந்தெடுக்கவும். அதன் பிறகு, திரையில் காட்டப்பட்டுள்ள கேப்ட்சா குறியீட்டை உள்ளிட்டு, தேடலைக் கிளிக் செய்யவும். இப்போது ஆயுஷ்மான் பாரத் யோஜனாவில் பட்டியலிடப்பட்டுள்ள மருத்துவமனைகளின் முழுமையான பட்டியலைக் காணலாம். இந்த மருத்துவமனைகளில் எந்தெந்த நோய்களுக்கு காப்பீடு செய்யப்படும் என்பதும் இதன் கீழே தகவல்கள் கொடுக்கப்பட்டிருக்கும்.